“ரிங்கு சிங் மாதிரி யாரையும் பார்த்ததே இல்லை.. அவர்கிட்ட ஸ்பெஷல் இதான்” – முன்னாள் தேர்வுக்குழு தலைவர்!

0
87
Rinku

ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய தேசிய அணிக்கு கண்டெடுக்கப்பட்ட மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக 26 வயது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் இருக்கிறார்.

பேட்டிங்கில் மிடில் வரிசையில் இருந்து கீழே எந்த இடத்தில் விளையாடுவது என்றாலும், சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் ஆட்டத்தைக் கட்டமைத்து, நல்ல ஸ்கோர்க்கு அணியை கொண்டு செல்வதிலும், இலக்கை எட்டி அணியை வெற்றி பெற வைப்பதிலும் சிறந்த ஃபினிஷர் ஆக உருவெடுத்து வருகிறார்.

- Advertisement -

இவரிடம் இருக்கும் சிறப்பான விஷயம் என்னவென்றால் இவரிடம் காணப்படும் அமைதியும், ஆட்டம் குறித்தான தெளிவும்தான். இதன் காரணமாக எந்த நேரத்தில் எப்படியான அணுகு முறையில் விளையாட வேண்டும் என்று இவருக்கு தெளிவாகத் தெரிகிறது. இவரது உடல் மொழியில் எந்த நேரத்திலும் பதட்டத்தை பார்க்கவே முடியாது.

தற்போது இந்திய வெள்ளைப்பந்து இரண்டு அணிகளிலும் ரிங்கு சிங் தனது பெயரை பதித்து வாய்ப்பைப் பெற்று விளையாடிவிட்டார். எதிர்காலத்தில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது.

ரிங்கு சிங் குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் பேசும்பொழுது “உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டிற்கு சென்று உடனே சிறப்பாக செயல்படுவது என்பது எளிதான காரியம் கிடையாது. இப்படி உள்நாட்டில் இருந்து பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தங்களை மாற்றுவதில் பெரிய சிரமங்கள் இருக்கிறது.

- Advertisement -

ரிங்கு சிங்கின் சிறந்த அம்சம் அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தன்னை மிகவும் முதிர்ச்சியாக மாற்றி அமைத்துக் கொண்ட விதம்தான். அவர் முதலில் விளையாடி இந்தியாவுக்காக இலக்கை நிர்ணயத்த விதம், ஆட்டத்தை எடுத்துச் சென்று முடித்த விதம் என்று, அவர் காட்டும் முதிர்ச்சி மிகச் சிறப்பானது. அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் தேவையான வீரர்.

தற்பொழுது அவர் டி20 கிரிக்கெட்டில் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்கிறார். ஆனால் நீங்கள் அவரை மேலேயும் விளையாட வைக்கலாம். ஏனென்றால் அவர் தனது இன்னிங்ஸை சரியாக ஆரம்பித்து இறுதியில் சிறப்பாக முடிக்க கூடியவர். இதன் காரணமாக இந்திய அணிக்கு நல்ல வசதியை கொடுக்கிறார்.

இதற்குமேல் அவர் களத்தில் மிகச் சிறந்த பீல்டர். மேலும் அவருடைய அர்ப்பணிப்பு எனக்கு பிடிக்கும். தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பியதும் நேராக ரஞ்சி கிரிக்கெட்டுக்கு வந்து உத்தரப்பிரதேச அணிக்காக 92 ரன்கள் எடுத்து கொடுத்தார்!” என்று கூறியிருக்கிறார்!