“இது முட்டாள்தனமானது.. 2 கையிலும் பந்து வீச அனுமதிக்க வேண்டும்” – ஹர்ஷா போக்லே பீட்டர்சன் மோதல்

0
61
Harsha

இந்திய அணியின் உலக தரம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் இரண்டாவது இன்னிங்ஸில் எதிர்த்து விளையாடி சதம் அடிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.

ஆனால் இந்த முறை இந்தியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் போப் இந்த கடினமான வேலையை செய்து காட்டி இருக்கிறார்.

- Advertisement -

இதற்கு இவர் மிக முக்கியமாக ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்கூப் போன்ற மாடர்ன் கிரிக்கெட் ஷாட்களை விளையாடி, இந்திய சுழற் பந்துவீச்சாளர்களின் லென்த்தை குறைத்து, அதன் மூலம் தொடர்ச்சியாக ரன்கள் குவித்து வருகிறார்.

இது நேற்று ஆங்கில கிரிக்கெட் வர்ணனையில் இருந்த இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஆகியோரிடம் காரசாரமான விவாதத்தை உருவாக்கியது.

ஹர்ஷா போக்லே பேட்ஸ்மேன்கள் தங்களுடைய இயல்பான பேட்டி முறையில் இருந்து கையை மாற்றி விளையாடும் ஸ்விட்ச் ஹிட் முறையை செய்ய அனுமதித்தால், பந்து வீச்சாளர்களும் இரண்டு கையால் பந்து வீச அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இதை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை, இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது, தற்பொழுது வர்ணனையின் நேரம் முடிந்து விட்டதால் நான் எழுந்து செல்கிறேன் என்பதாக கூறிவிட்டு போய்விட்டார்.

இதையும் படிங்க : “என்னுடைய விரக்திகளில் ஒன்று இந்த இந்திய வீரர்.. அவரைத் தாண்டவே முடியல” – ஜோ ரூட் புலம்பல்

இந்த நிலையில் ரசிகர் ஒருவரின் இப்படியான ட்விட்டர் கேள்விக்கு பதில் அளித்து இருந்த ஹர்ஷா போக்லே “இது முழுமையான முட்டாள்தனம். நீங்கள் பேட்ஸ்மேன் ஸ்விட்ச் ஹிட் விளையாட முடியும் என்றால், அதற்கு அனுமதி இருக்கிறது என்றால், ஒரு பந்துவீச்சாளர் இருக்கைகளாலும் பந்து வீச அனுமதிக்க வேண்டும். ஒரு வலது கை பந்துவீச்சாளர் இடது கை பந்துவீச்சுக்கு மாற வேண்டுமென்றால், நடுவரிடம் கூறிவிட்டு மாறலாம். இது தொடர்பான விவாதங்கள் வளரட்டும்” என்று கூறியிருக்கிறார்.