“இந்த தமிழக வீரரை தவறவிட்டது இப்பவும் கஷ்டமா இருக்கு நெட்ல எங்களுக்கு செமையா போட்டாரு” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்பிங் புலம்பல்!

0
27015

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 16வது சீசன் தற்பொழுது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே மற்றும் கே கே ஆர் அணிகள் விளையாடின .

இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பிக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது இந்த தோல்வியால் சிஎஸ்கே அணியின் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருக்கிறது

- Advertisement -

சுழற் பந்துவீச்சிக்கு சாதகமாக இருந்த சேப்பாக்கம் ஆடுகளத்தில் கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி சென்னை அணியை கட்டுப்படுத்தினர் . நான்கு ஓவர்கள் வீசிய நிறைய 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அம்பட்டி ராயுடு மற்றும் மொயின் அலி ஆகியோரின் விக்கெட்டை ஒரே ஓவரில் வீழ்த்தினார் .

மறுமுனையில் பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி ருத்ராஜ் மற்றும் அஜிங்கரகானே ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை அணிக்கு துவக்கத்திலேயே தடுமாற்றத்தை உருவாக்கினார் . இதனால் சென்னை அணியால் விரைவாக ரன் குவிக்க முடியாமல் 20 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது .

இந்தத் தொடர் முழுவதும் வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார் . இந்த வருட ஐபிஎல் தொடரில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் அவர் . இரண்டு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுள்ளார் . ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இறுதி ஓவரில் சிறப்பாக பந்து வீசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது சென்னை அணிக்கு இன்னும் மிகப்பெரிய இழப்புதான் என்று தெரிவித்திருக்கிறார் . நேற்றைய போட்டிக்கு பின் பேட்டியளித்தவர் சில ஆண்டுகளாக எங்களிடம் நெட் பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தி இருந்தார் . அந்தக் காலகட்டங்களிலேயே சென்னை பேட்ஸ்மேன் களுக்கு அவர் மிகப்பெரிய சவாலாக இருந்தார் . எம் எஸ் தோனியை கூட பல நேரங்களில் ஆட்டம் இழக்க செய்திருக்கிறார் என்று தெரிவித்தார் .

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை ஒரு வீரரை நம் விருப்பத்திற்கு ஏற்ப எடுக்க முடியாது அதற்கென்று ஏலம் மற்றும் விதிமுறைகள் இருக்கின்றன இதன் காரணமாகத்தான் எங்களால் அவரை எடுக்க முடியவில்லை . இது இன்று வரை எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய ஒரு விஷயம் என தெரிவித்திருக்கிறார் ஸ்டீபன் பிளமிங் . 2019 ஆம் ஆண்டு ஏலத்தில் 8.4 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி இவரை வாங்கியது . 2020 ஆம் ஆண்டு ஏலத்தில் கொல்கத்தா அணி வருண் சக்கரவர்த்தியை எடுத்தது . அதன் பிறகு அந்த அணியா வரை தக்கவைத்துக் கொண்டது . 2021 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணி இறுதிப்போட்டி வரை முன்னேற சிறப்பான பங்களிப்பை அளித்தவர் வருண் சக்கரவர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது