ஆசிய கோப்பை: இந்த ரெண்டு டாப் பவுலர்ஸ் எங்க டீம்ல இல்லப்பா.. எதிரணி எல்லாம் நிம்மதியா இருங்க – பாகிஸ்தான் கேப்டனை வச்சு செஞ்ச இர்பான் பதான்!

0
128

ஆசிய கோப்பை தொடரில் இந்த இரண்டு இந்திய வீரர்களும் இடம்பெறவில்லை. ஆகையால் எதிரணிகள் கொஞ்சம் நிம்மதியாக இருங்கள் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் ட்வீட் செய்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்குகிறது. துவக்க போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இரு அணிகளும் மோதுகின்றன. ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் பலப்பரிட்சை மேற்கொள்கின்றன. கடைசியாக இந்த இரு அணிகளும் உலககோப்பை டி20 போட்டியில் மோதியது. அதில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அப்போது இந்திய அணியை தனது பந்துவீச்சு மூலம் தவிடுபொடி ஆக்கியவர் வேகப்பந்து பேச்சாளர் சாஹின் அப்ரிடி. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவரது பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயம் அடைந்த சாஹின் அப்ரிடி குணமடைவதற்கு இன்னும் 4-6 வாரங்கள் ஆகும் என தெரிவித்ததால் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. இது இந்திய அணிக்கு, குறிப்பாக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு, நிம்மதியாக இருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்காக பல விமர்சனங்களையும் அவர் சந்தித்து வருகிறார்.

தற்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் அதற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். அவர், “எதிரணி வீரர்கள் தற்போது நிம்மதியாக இருப்பார்கள். ஏனெனில் இந்திய அணியில் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இரண்டு முக்கியமான வீரர்கள் இல்லை.” என பதிவிட்டிருந்தார்.

பும்ரா காயம் காரணமாக சிகிச்சையில் இருந்து வருகிறார். அவருடன் சேர்ந்து ஹர்ஷல் பட்டேலும் சிகிச்சையில் இருக்கிறார். இருவரும் பெங்களூரில் உள்ள இந்திய தேசிய அகடமியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பதிலாக இம்முறை இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஹர்ஷதிப் சிங் மற்றும் ஆவேஸ் கான் இருவரும் கடந்த சில தொடர்களாக இந்திய டி20 அணியில் தொடர்ந்து இடம்பெற்று தங்களது பங்களிப்பு கொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் கூடுதல் வாய்ப்பை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

அனுபவமிக்க மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சமிக்கு ஆசிய கோப்பை தொடரில் இடம் கொடுக்கப்படவில்லை. இதற்கும் சபா கரீம், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்ற பலர் தங்களது விமர்சனங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.