போடுங்கடா வெடிய… லக்னோ செய்த தவறால், சிஎஸ்கே நேரடியாக பைனலுக்கு தகுதிபெற அரிய வாய்ப்பு!

0
8428

முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுவது உறுதியாகியுள்ளது. லக்னோ-கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியால் இது உறுதியானது.

இன்றைய தினம் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்த 223 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்த இலக்கை துரத்திய டெல்லி அணி 146 ரன்களுக்குள் சுருண்டதால், 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி நல்ல ரன்ரேட் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தையும் பெற்றது. தற்போது 14 போட்டிகளில் 17 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி +0.652 ரன்ரேட் வைத்துள்ளது.

சிஎஸ்கே அணியின் இடத்தை காலி செய்யும் வாய்ப்பு லக்னோ அணிக்கு மட்டுமே இருந்தது. லக்னோ அணி 13 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறது. லக்னோ அணியின் தற்போதைய ரன்ரேட் +0.304 ஆகும்.

லக்னோ தனது கடைசி லீக் போட்டியை கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணியை விட அதிக ரன்ரேட் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கவேண்டும் என்றால், கொல்கத்தா அணியை 100+ ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

- Advertisement -

லக்னோ அணி அதனை செய்யத் தவறியதால், சிஎஸ்கே அணியின் இரண்டாவது இடம் உறுதியாகிவிட்டது. ஆகையால் வருகிற 23ஆம் தேதி நடைபெறும் முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுவதும் உறுதியாகிவிட்டது.

கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றாலே, அவர்களது பிளே-ஆப் வாய்ப்பும் உறுதியாகிவிடும். 3ஆவது இடத்தை பிடிக்கும். 4ஆவது இடத்திற்கு மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் இடையே கடும்போட்டி நிலவுகிறது.

இரண்டு அணிகளும் தனது கடைசியில் போட்டியை வெற்றி பெற்றால் தலா 16 புள்ளிகளுடன் இருக்கும் அடிப்படையில் ஏதேனும் ஒரு அணி முன்னேறும் தற்போது மும்பை அணியின் ரன் ரேட் -0.128 ஆகும். ஆர்சிபி அணிக்கு ரன்ரேட் +0.180 ஆகும்.

தற்போதைய நிலவரப்படி ஆர்சிபி அணிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன மும்பை அணி வலுவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

விறுவிறுப்பை எட்டியுள்ள கடைசி கட்ட ஐபிஎல் லீக் போட்டிகளில் எந்த அணி நான்காவது இடத்தை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.