“நீங்க நினைக்கிறவங்க இல்ல.. இவர்தான் டீமுக்கு பெரிய மாற்றத்தை கொடுக்க போறாரு!” – சுனில் கவாஸ்கர் கணிப்பு!

0
731
ICT

இந்திய அணி இன்று 16ஆவது ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்திய அணி இதுவரை ஏழு முறை ஆசிய கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை கைவசம் வைத்திருக்கிறது.

இந்திய அணியை பொறுத்தவரை தற்பொழுது ஒரு புதிய பிரச்சனையாக சில வருடங்களாக இருந்து வருவது, சுழற் பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதுதான்!

- Advertisement -

பொதுவாக ஆசிய பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சை மிகச் சிரமமின்றி விளையாடுவார்கள் என்று கூறுவார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் வருகை, மற்றும் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் எல்லாம் சேர்ந்து, வேகப்பந்து வீச்சில் மிகச்சிறப்பாக விளையாடும் இந்திய பேட்ஸ்மேன்கள், சுழற்பந்து வீச்சில் விளையாடும் திறனை குறைத்து விட்டார்கள்.

இதன் காரணமாக கடந்த சில வருடங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக கொஞ்சம் தடுமாறவே செய்கிறார்கள். பகுதி நேரமாக பந்து வீச வரும் சுழற் பந்துவீச்சாளர்களிடம் கூட விக்கெட்டை கொடுக்கிறார்கள். குறிப்பாக இடது கை சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய வலது கை பேட்ஸ்மேன்கள் தடுமாறுகிறார்கள்.

நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்று போட்டியில், இந்திய அணி தனது மொத்த 10 விக்கெட்டுகளையும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு தந்து, இதுவரை இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழாத ஒன்றை நிகழ்த்தியது. அதே சமயத்தில் இந்திய அணியில் சுழற் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருக்கிறது. அதில் குல்தீப் யாதவ் மிக முக்கியமான கருவியாக இருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டி குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் “குல்தீப் தன்னால் ஒரு மாற்றத்தை போட்டியில் ஏற்படுத்த முடியும் என்று காட்டி இருக்கிறார். இடது கை வலது கை எதுவாக இருந்தாலும் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சு விக்கெட்டுகளை பெற்றுத்தரும். மேலும் சிறந்த டாட் பந்துகள் வீசுகிறார்.

அவர் பந்தை கொஞ்சம் பிளாட்டர் ஆக, அதிக நேரம் காற்றில் கொடுக்காமல், மேலும் பந்தில் நல்ல திருப்பத்தையும் கொடுக்கின்ற காரணத்தினால், அவரை விளையாடுவது கொஞ்சம் கடினமாக மாறுகிறது. இன்றைய போட்டியில் இவர் முக்கியமானவராக இருப்பார்.

இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக இன்று பந்துக்கு இறங்கி சென்று விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். இந்த மாதிரியான விக்கெட்டுகளில் சுழற் பந்துவீச்சை விளையாடுவது சுலபமான காரியம் கிடையாது.

ஆனால் பந்து எப்போதெல்லாம் காற்றில் இருந்து கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் வேகமாக கால்களை நகர்த்தி டிரைவ் ஆடி விட வேண்டும். அதே சமயத்தில் விக்கெட் தட்டையாகவும், பந்து பெரிய அளவில் திரும்பாமல் இருந்தால், பந்தை தூக்கி அடிக்க நினைக்கக் கூடாது. இது அவர்களை யோசிக்க வைக்க கூடியதாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!