“விக்கெட்டுக்காக இவங்க சண்டை போட்டுக்கறதை பாக்க வேடிக்கையா இருக்கு!” – சுரேஷ் ரெய்னா அதிரடியான பேச்சு!

0
5306
Raina

நேற்று உலகக்கோப்பை தொடரில் மீண்டும் ஒருமுறை இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களுடைய தரம் என்ன என்பதை உலகுக்கு காட்டி இருக்கிறார்கள்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி யார் ஒருவரும் சதம் அடிக்காமல் 357 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

இந்த நிலையில் பந்துவீச்சில் இந்திய அணி இலங்கை அணியை 55 ரன்களில் சுருட்டி 305 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி முதல் அணியாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் அரை இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்று இருக்கிறது. அடுத்து இரண்டு போட்டிகளும் இந்திய அணிக்கு சம்பிரதாய போட்டிகளாகவே அமையும்.

இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. பும்ரா ஏழு போட்டிகளில் 15 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். முகமது சிராஜ் 7 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அதே சமயத்தில் முகமது சமி மூன்று போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

வேகப்பந்து வீச்சில் இவர்கள் மூவரும் சேர்ந்து வந்த மூன்று போட்டிகளில் இந்திய அணியின் பந்து வீச்சு தாக்குதல் மிகக்கூர்மையாக இருக்கிறது. எதிரணியின் பேட்டிங் எவ்வளவு தரமானதாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் இவர்கள் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பி விடுகிறார்கள். நியூசிலாந்து அணிக்கு எதிராக அப்படித்தான் செய்தார்கள்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “என்ன ஒரு அற்புதமான பந்துவீச்சு செயல்திறன். இவர்கள் மிகச் சிறந்தவர்களில் ஒருவர் என்று நான் கூறுவேன். இவர்கள் 140 கிலோ மீட்டர் வேகத்தில் ஸ்விங் மற்றும் சீம் கண்ட்ரோலுடன் பேசுகின்றனர்.

இவர்களுக்கு இடையே யார் விக்கெட் எடுப்பது என்கின்ற போட்டி நிலவுவதாக நினைக்கிறேன். ஒருவர் ஐந்து விக்கெட் எடுத்தால் உடனே இன்னொருவர் நானும் ஒரு விக்கெட் ஆவது எடுக்கிறேன் என்று போட்டியிடுகிறார். இந்த இந்திய பந்துவீச்சாளர்களை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.

இன்று முகமது சமி, ஜாகீர் பாய் மற்றும் ஜவஹரல் ஸ்ரீநாத் பாய் ஆகியோரை தாண்டி உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக மாறியிருக்கிறார். அவர் கையில் பந்து வந்தால் ஸ்டெம்ப் பெயில்களில் லைட் எரியும் என்பது உறுதியாகிவிட்டது!” என்று கூறியிருக்கிறார்!