“சதத்தை விடுங்க ஜெயிச்சது நிம்மதி.. ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திக்கிட்டே இருந்தேன்..!” – பென் ஸ்டோக்ஸ் பேச்சு!

0
690
Stokes

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் புனே மைதானத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த உலகக் கோப்பைத் தொடர் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இங்கிலாந்து அணிக்கு மிகவும் மோசமான ஒன்றாக அமைந்தது. இந்த நிலையில் எட்டாவது போட்டியில், இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து களமிறங்கியது.

- Advertisement -

ஏனென்றால் இந்த போட்டியில் வென்றால்தான், 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்கான தகுதியை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த முறையும் நட்சத்திர ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் ஏமாற்றினார்கள். டேவிட் மலான் 87 ரன்கள் அதிரடியாக எடுத்தார்.

ஓரளவுக்கு நல்ல துவக்கம் கிடைத்தாலும் கூட மீண்டும் விக்கெட் சரிவுகள் இங்கிலாந்து அணிக்கு உருவானது. இந்த நிலையில் ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்சை வைத்துக் கொண்டு மிகச் சிறப்பாக விளையாடிய பென்ஸ் ஸ்டோக்ஸ் உலக கோப்பை வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்து, 108 ரன்கள் குவித்தார். வோக்ஸ் 51 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இங்கிலாந்து 339 ரன்கள் குறித்து நெதர்லாந்து அணியை 179 ரன்களுக்கு சுருட்டி 160 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

விருதை பெற்ற அவர் பேசும் பொழுது “சதத்தை அடித்ததை விட அணி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு இது மிக கடினமான உலகக் கோப்பையாக அமைந்திருக்கிறது. இந்த போட்டியில் இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. சில டென்னிஸ் பால் பவுன்சர்களும் வந்தது.

வோக்ஸ் உடன் இணைந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினேன். அழுத்தம் அதிகரிக்கும் போதெல்லாம் ஸ்கோர் போர்டை பார்த்து இன்னும் நேரம் இருக்கிறது என்று நினைவுப்படுத்திக் கொண்டேன். போட்டியை ஆழமாக எடுத்துச் சென்று இறுதியில் ரன்கள் அதிரடியாக எடுத்துக் கொண்டோம்.

வோக்ஸ் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக எங்களுக்கு மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக இருந்து வருகிறார். இன்றும் அவர் இதை நிரூபித்து இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!