“கோலியும் ரோகித்தும் எங்க ஊர் மைதானத்தில் இதை செஞ்சா சிறப்பா இருக்கும்!” – சவுரவ் கங்குலி சிறப்பு பேச்சு!

0
1387
Virat

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடப்பு உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியாக மாறி இருக்கிறது.

காரணம் இந்த இரண்டு அணிகளும் தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்து வருகின்றன. மேலும் இரண்டு அணிகளுமே 5 பந்துவீச்சாளர்கள், பேட்டிங் வரிசை ஏழாம் இடம் வரை என்று ஒரே மாதிரியாக இருக்கின்றன.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் இந்த போட்டியில் வெல்லும் அணியும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை இழக்காமல் லீக் சுற்றை முடிக்கும். அப்படி முடிப்பதாக இருந்தால் பெரிய அணியான ஆஸ்திரேலிய அணியை சந்திக்க வேண்டி வராது.

இப்படியான காரணங்கள் சேர்ந்து இந்த போட்டியை முக்கியமான போட்டியாக மாற்றி இருக்கிறது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுவதால், கொல்கத்தாவை சேர்ந்த இந்திய லெஜெண்ட் வீரர் சௌரவ் கங்குலி, இப்போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்த உலகக் கோப்பையின் இரண்டு சிறந்த அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி இதுவாகும். இந்தியாவை வீழ்த்துவது கடினம். தென் ஆப்பிரிக்கா அணியும் நல்ல கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஆனாலும் கூட இந்தியாவை வீழ்த்துவது பெரிய வேலையாக இருக்கும். ஒட்டுமொத்தமாக இது பரபரப்பான சிறந்த போட்டியாக அமையும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இந்தியாவின் வேகப்பந்து வீச்சு தாக்குதல் மிகவும் சிறப்பானது. சமி, பும்ரா, சிராஜ் 3 பேரும் பந்து வீசுவதை எல்லோரும் ரசிக்கிறோம். பும்ராவின் வருகை அணியில் பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக மற்ற இரண்டு பந்துவீச்சாளர்களிடம் பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

இங்கு பேட்டிங் செய்ய நல்ல விக்கெட் இருக்கிறது. அவுட் ஃபீல்டு ரொம்ப வேகமானது. மேலும் பவுன்ஸ் மற்றும் வேகமும் இருக்கும். இங்கு நிறைய ரன்கள் வரும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இங்கு ரோகித் சர்மா சதம் அடிப்பார். இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு செல்லும். விராட் கோலி சிறந்தவர்களில் ஒருவர். அவர் இந்து சதம் அடித்தால் அது மிகச் சிறந்ததாக இருக்கும். அவர் இந்த தொடரில் சில முறை சதத்தை நெருங்கி தவற விட்டிருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!