“இலங்கை கிரிக்கெட்டை அழித்தது இந்த இந்தியர்தான்!” – அர்ஜுன ரனதுங்கா நேரடி குற்றச்சாட்டு!

0
8000
BCCI

உலகக்கோப்பை தொடருக்கு முன்பு நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரில், இலங்கை கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சிறப்பாகவே செயல்பட்டு இருந்தது.

ஆனாலும் கூட இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 50 ரன்கள் ஆல் அவுட் ஆனதின் மூலம் அந்நாட்டு கிரிக்கெட் அமைப்புக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

- Advertisement -

இதை ஒரு கிரிக்கெட் விபத்தாக இலங்கை கிரிக்கெட் நினைத்தது. இதற்கு அடுத்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்படும் என்று நம்பினார்கள்.

இருந்தபோதிலும் மீண்டும் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி 55 ரன்கள் ஆல் அவுட் ஆகி மீண்டும் மீண்டும் இலங்கை கிரிக்கெட்டுக்கு அதிர்ச்சி அளித்தது. இதனால் அந்த அணியின் மீதான விமர்சனங்கள் உள்நாட்டில் அதிகரித்தது.

இந்த நிலையில் இலங்கை நாட்டின் விளையாட்டு அமைச்சகம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஒட்டுமொத்தமாக கலைத்தது. மேலும் அர்ஜுனர ரனதுங்கா தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை வைத்து ஒரு தற்காலிக குழுவை அமைத்தது.

- Advertisement -

இந்தக் குழு மீது தொடரப்பட்ட வழக்கில் இலங்கை நீதிமன்றம், இந்தக் குழுவை தற்காலிகமாக தற்பொழுது நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில்தான் இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட்டில் தலையிட்டதாக ஐசிசி இலங்கை அணியை சர்வதேச கிரிக்கெட்டில் தற்காலிகமாக தடை செய்தது.

தற்பொழுது இலங்கைக்கு 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பெற்றுத் தந்த கேப்டன் அர்ஜுன ரனதுங்கா பேசும் பொழுது ” இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கும், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷாவுக்கும் இருக்கின்ற தொடர்பு காரணத்தினால், பிசிசிஐ இலங்கை கிரிக்கெட்டை மிதித்து அழிக்க முடியும் என்று நினைக்கிறது.

நாங்கள் இந்த நிலைக்கு எப்படி வந்தோம் என்பதை தீர விசாரித்து, இதற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்று அம்பலப்படுத்த வேண்டும். ஒருவர் தன்னுடைய சுயலாபத்துக்காக துரோகம் இழைப்பதற்கு அமைப்பு அனுமதித்தால், முறையான விசாரணை நடத்தி ஜனாதிபதி கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். இதைத் தூய்மைப்படுத்த வேண்டும்!” என்று காட்டமாக கூறியிருக்கிறார்!