“கோலி ரோகித் அழுததை பார்க்க மோசமாக இருந்தது.. என்ன நடந்தது?” – அஷ்வின் உருக்கமான விளக்கம்!

0
2097
Ashwin

இந்திய அணி உள்நாட்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை நிச்சயம் கைப்பற்றும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் நம்பிக்கை வைத்திருந்ததை விட அதிகபட்ச நம்பிக்கையை விளையாடிய வீரர்கள் வைத்திருந்தார்கள்.

அந்த அளவிற்கு இந்திய அணி எல்லா துறைகளிலும் வலிமை வாய்ந்ததாக நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இருந்தது. மேலும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இறுதிப்போட்டியை எட்டியது. அவர்கள் வெற்றி பெற்ற விதம், எதிரணிகளை முடக்கிய விதம், நிச்சயம் உலக கோப்பையை வெல்வோம் என்கின்ற நம்பிக்கையை சுற்றிலும் விதைத்தது.

- Advertisement -

இப்படியான நிலையில் தான் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அனுப்பி எதிராக தோல்வி அடைந்து உலகக் கோப்பையை இந்திய அணி இழந்தது. இதிலிருந்து இன்னும் வீரர்கள் மீண்டும் வந்து விட்டார்களா என்பது குறித்தான எதுவும் தெரியாது. அவர்கள் ஒரு அணியாக இந்த முறை விளையாடிய கிரிக்கெட் பிராண்ட் அப்படியானது.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “நாங்கள் தோல்வியில் நிச்சயம் வலியை உணர்ந்தோம். ரோகித்தும் விராட்டும் அழுவதை பார்க்க மோசமாக இருந்தது. எப்படி இருந்தாலும் இப்படியான ஒன்று நடந்திருக்கவே கூடாது.

இது ஒரு அனுபவம் வாய்ந்த அணி. இதில் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று மிக நன்றாக தெரியும். அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என இரண்டு இயல்பான தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து அணிக்குள் நல்ல அதிர்வை கொண்டு வந்தார்கள்.

- Advertisement -

கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் எம்எஸ்.தோனி சிறந்த கேப்டன் என்று சொல்வார்கள். ரோகித் சர்மாவும் சிறந்த நபர். ரோகித் சர்மா அணியில் உள்ள ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் புரிந்து கொள்ள நினைப்பார். ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும் பிடிக்காது என்பது அவருக்கு தெரியும். எல்லோருடனும் நல்ல புரிதல் அவருக்கு இருந்தது.

அவர் அணியில் நிறைய முயற்சிகளை செய்தார். தூக்கத்தை இழந்து அணிக் கூட்டங்களுக்கு வந்தார். எல்லாத் திட்டத்தையும் ஒவ்வொரு தனிப்பட்ட வீரர்களுக்கும் அவர் புரிய வைக்க முயற்சி செய்தார். அதற்காக கடுமையாக உழைத்தார். இது இந்திய கிரிக்கெட்டில் ஒரு மேம்பட்ட தலைமைத்துவம்.

மேலும் அவர் பேசும் பொழுது எல்லோரையும் ஒரே வகையான பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடச் சொல்வது, அதே சமயத்தில் அந்த வகை பிராண்ட் கிரிக்கெட்டை அவரே மைதானத்திற்கு சென்று முன்னணியில் விளையாடுவது என்பது சிறப்பான விஷயம்.

அவர் எங்களுக்கு மேலிருந்து மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தார். 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாலும் பரவாயில்லை அதிரடியான கிரிக்கெட் பிராண்டை விடக்கூடாது. குறைந்தபட்சம் ஒரு டோனை அமைத்து எதிரணியை பயமுறுத்துவோம் என்று கூறினார்!” என்று தெரிவித்துள்ளார்!