இங்கிலாந்துடன் சம்பவம் செய்யப்போவது விராட் சூர்யா கிடையாது இவர்தான் ; முகமது கைஃப் அதிரடி கணிப்பு!

0
4884
Viratkohli sky

இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் ஐந்து ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோற்று, பாகிஸ்தான், நெதர்லாந்து, பங்களாதேஷ், ஜிம்பாப்வே அணிகளிடம் வென்று 8 புள்ளிகளுடன் தனது குழுவில் முதலிடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது!

இதையடுத்து இந்திய அணி நாளை மறுநாள் அடிலெய்டு மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோத இருக்கிறது. இரண்டு பலம் வாய்ந்த அணிகள் ஒரு உலகக்கோப்பை தொடர் மாதிரியான பெரிய தொடரில் அறையிறுதியில் மோதிக்கொள்ள இருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கின்ற ஒரு விஷயம்!

- Advertisement -

இந்திய அணி அரையிறுதி சுற்றை எட்டுவதற்கு பேட்டிங்கில் விராட் கோலி ஒரு மிக முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார். ஐந்து போட்டிகளில் அவர் ஆட்டம் இழக்காமல் மூன்று அரை சதங்களை எடுத்து 246 ரண்களை 139 ஸ்ட்ரைக்ரேட்டில் அடித்திருக்கிறார்.

விராட் கோலியை போலவே இந்திய அணியின் புதிய டி20 கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சூரியகுமார் யாதவ் 3 அரை சதங்களுடன் 5 போட்டிகளில் 225 ரண்களை யாராலும் அடிக்க முடியாத 194 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி தள்ளி இருக்கிறார் .

இப்படி இருக்க இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தடுமாறி வந்த நிலையில், கே எல் ராகுல் கடைசி இரு ஆட்டங்களில் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடன் அரை சதம் எடுத்து ஓரளவுக்கு முன்னேறி வந்திருக்கிறார். அதே சமயத்தில் 5 ஆட்டங்களில் 89 ரன்களை மட்டுமே ஒரு அரை சதத்துடன் தடுமாறி எடுத்திருக்கும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஒருவித அழுத்தத்துடனேயே பேட்டிங்கில் காணப்படுகிறார்!

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் ரோகித் சர்மா குறித்து பேசுகையில் ” ரோஹித் சர்மா பேட் இந்த தொடரில் அதிகம் பேசவில்லை. ஆனால் அவர் ஒரு பெரிய மேட்ச் வின்னர் பிளேயர் என்று நான் நினைக்கிறேன். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாட விரும்புவார். அவர் அரை இறுதியில் அதிக ரன்கள் அடித்தால் நான் அதற்கு ஆச்சரியப்பட மாட்டேன். அவரிடம் அந்த எக்ஸ் காரணி இருக்கின்றது. அழுத்தம் மிகுந்த நேரங்களில் அவர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவராக கடந்த காலங்களில் இருந்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ரோகித் சர்மாவை நான் சிறந்த வீரராக கருதுகிறேன். ஆனால் மிக முக்கியமான நேரம் கொண்ட அடுத்த இரண்டு போட்டிகள் வந்துவிட்டது. அடுத்த போட்டி ஒரு கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு மிகப் பெரிய முக்கியமான போட்டி. கேப்டனாக அவர் இந்திய அணிக்கு பொறுப்பேற்றதிலிருந்து டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். கேப்டனாக கேப்டன்சி மூலம் அவர் கொண்டு வந்த மதிப்பு மகத்தானது” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்!

- Advertisement -