“பாபர் அசாம் மற்றும் எங்கள் மீது உடனே வேட்டையை தொடங்குவது நியாயமே இல்லாதது!” – பாகிஸ்தான் பயிற்சியாளர் பரபரப்பான பேச்சு!

0
24303
Babar

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மோதிய போட்டியில், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழந்து இருக்கிறது.

நேற்றைய போட்டியில் 46.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் கையில் இருந்தது விக்கெட்டுகள் கொஞ்சம் சுதாரித்து விளையாடி இருந்தால் போட்டியில் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்தப் போட்டியில் 140 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை பார்த்து தான் இழந்துவிட்ட நிலையில்தான் 270 ரன்கள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் மேல் வரிசையில் தொடர்கிறது.

பந்துவீச்சை பொறுத்தவரை பாகிஸ்தான அணி மிகச் சிறப்பாக இந்த ஆட்டத்தில் செயல்பட்டு இருந்தது. கடைசி நேரத்தில் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தினால் பாகிஸ்தான அணி தோல்வியடைந்து இருக்கிறது.

ஏற்கனவே பெற்ற தோல்விகளால் பாகிஸ்தான் அணி நிர்வாகம் மற்றும் கேப்டன், பயிற்சியாளர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். தற்போது அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறும் சூழல் வந்திருப்பதால், இந்த விமர்சனங்கள் இன்னும் கடுமை அடையும். மேலும் உலகக்கோப்பை தொடர் முடிந்து பாபர் அசாமை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் பேசும் பொழுது “இன்று இரவு எங்கள் வீரர்கள் இறுதிவரை போராடியது குறித்து நான் பெருமைப்படுகிறேன். இந்த ஆடுகளத்தில் சரியான ஸ்கோர் 300 ஆக இருக்கும். ஆனால் குறைவான ஸ்கோர் எடுத்த பொழுதும் கூட, எங்களுடைய பந்துவீச்சாளர்கள் எல்லாவற்றையும் கொடுத்து போராடினார்கள். இன்று எங்களுடைய ஓய்வறை ஏமாற்றமானதாக இருக்கும்.

நிச்சயமாக பாபர் அசாம், இன்சமாம, எங்கள் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாக குழு மீது உடனடியாக கடுமையான வேட்டையை துவங்குவது நியாயமற்றதாக இருக்கும். எங்கள் வீரர்கள் எப்படியான முயற்சி செய்தார்கள் என்று எனக்குத் தெரியும். பயிற்சி ஊழியர்கள் மற்றும் வீரர்களின் செயல்பாடு ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆக இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!