7 வருடங்கள்.. பஞ்சாப்பை வீழ்த்தி தமிழ்நாடு காலிறுதிக்கு தகுதி.. கிரேட் கம்பேக்

0
457
TNCA

தற்பொழுது நடைபெற்று வரும் ரஞ்சி டெஸ்ட் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில், சேலத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தமிழ்நாடு அணி ஏழு வருடங்களுக்குப் பிறகுகால் இறுதிக்கு தகுதிப் பெற்று இருக்கிறது.

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு அணிக்கு பேட்ஸ்மேன்கள் நல்ல பங்களிப்பை கொடுத்தார்கள்.

- Advertisement -

தமிழ்நாடு அணியில் பாபா இந்திரஜித் 185, விஜய் சங்கர் 130 ரன்கள் எடுத்து நல்ல ஸ்கோரை நோக்கி தமிழக அணியை கொண்டு சென்றார்கள். முடிவில் 435 ரன்கள் எடுத்து தமிழ்நாடு அணி ஆல் அவுட் ஆகியது.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு மல்கோத்ரா மட்டுமே தாக்குப்பிடித்து அரை சதம் அடித்தார். அந்த அணி 274 ரன்கள் ஆல் அவுட் ஆகி ஃபாலோ ஆனும் ஆனது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பஞ்சாப் அணிக்கு, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் நெகேல் வதேரா அதிரடியாக 107 பந்தில் 109 ரன்கள் அடித்தார். அந்த அணி மீண்டும் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.

- Advertisement -

இதனால் குறைந்த இலக்கத்தை நோக்கி விளையாடிய தமிழக அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஏழு வருடங்களுக்குப் பிறகு ரஞ்சி கிரிக்கெட்டில் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.

தமிழக அணியின் பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் அஜித் ராம் மிகச் சிறப்பாக பந்துவீசி ஆறு விக்கெட் கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் இவர் மீண்டும் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : “3வது டெஸ்ட்.. லோக்கல்ல அடிச்ச மாதிரி.. எங்கள இந்த பையன் அடிச்சிட்டான்.. தடுக்கிற ஐடியாவே இல்ல” – ஓவைஸ் ஷா பேட்டி

மேலும் இந்த போட்டியில் தமிழக அணியின் கேப்டனாக சாய் கிஷோர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் ஆறு விக்கெட் கைப்பற்றி தமிழக அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இருந்திருக்கிறார்கள்.