சின்ன பகவதி தெரியுமா? அந்த மாதிரி இவர் சின்ன கில்கிறிஸ்ட்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இஷான் கிஷன் ஆட்டத்தை பாருங்க! பயிற்சியாளர் கொடுத்த பில்ட் அப்

0
882

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு கில்கிறிஸ்ட் எப்படி இருந்தாரோ, அதேபோல் இஷான் கிஷன் இருக்க வாய்ப்பு இருப்பதாக அவருடைய சிறு வயது பயிற்சியாளர் உத்தம் மஜும்ந்தர் தெரிவித்துள்ளார். விபத்திலிருந்து ரிஷப் பண்ட் தற்போது தான் மீண்டு வருகிறார்.

இதனால், அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அணியில் கே எஸ் பரத் இருந்தாலும்,கே எல் ராகுலை விக்கெட் கீப்பராக இந்திய அணி பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் காயம் அடைந்ததன் காரணமாக தற்போது அந்த இடத்திற்கு இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவருடைய சிறு வயது பயிற்சியாளர் உத்தம் மஜூம்ந்தர் ராகுலுக்கு காயம் அடைந்தபோது இஷான் கிஷனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என நான் நினைத்தேன். அது போல் தற்போது தேர்வுக் குழுவினர் இஷான் கிஷனை சேர்த்து இருக்கிறார்கள். தற்போது பிளேயிங் லெவனனில் இஷான் கிஷனை பார்க்க நான் ஆசைப்படுகிறேன்.

எப்போதுமே இஷான் கிஷனுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என ஆசைப்பட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி போன்ற பெரிய மேடையில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அது பெரிய விஷயம்தான். அதனை அவர் சிறப்பாக பயன்படுத்துவார்.டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் எப்படி பயமின்றி அதிரடியாக விளையாடுவாரோ அதேபோல் இசான் கிஷானால் விளையாட முடியும்.

நடு வரிசையில் விளையாடுவது என்பது மிகவும் சவாலான காரியம். ஏனென்றால் அப்போது இரண்டாவது புதிய பந்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிர்கொள்ள நேரிடும். இந்த சவாலான சூழலை கையாளும் திறமை இஷான் கிஷனுக்கு இருக்கிறது. அதற்காக அவர் தன்னை தயார் படுத்தி இருப்பதாகவே நான் நம்புகிறேன்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு கில்கிறிஸ்ட் எப்படி விளையாடுவாரோ அதேபோல் இந்திய அணிக்கு இஷான் கிஷன் இருப்பார். ஏனென்றால் இருவரின் பேட்டிங்ளும் சில ஒற்றுமைகள் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இஷான் கிசனுக்கு வாய்ப்பு கிடைத்தால் அது எல்லாருக்குமே பெரிய தருணமாக இருக்கும் என்று பயிற்சியாளர் மஜும்ந்தர் கூறினார். இஷான் கிஷன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்க வெறும் 14 போட்டிகள் மட்டுமே எடுத்துக் கொண்டார். ரஞ்சி கிரிக்கெட்டில் 408 போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன் 2985 ரன்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.