இந்திய அணிக்குள் மீண்டும் நுழைந்திருக்கும் அதிரடி வீரர் இஷான் கிஷான் தான் சந்தித்ததில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர்கள் யார் என்பது குறித்து மிகவும் சுவாரசியமான தகவல் ஒன்றைக் கூறி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட சில முரண்களால் சில ஆண்டுகள் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இந்திய டி20 அணிக்குள் நுழைந்ததோடு உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற்று இருக்கிறார். மேலும் லெவனிலும் கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் இஷான் கிஷான் 15ஆவது வீரராக கூட இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று எப்போதும் கூறுவார். அவர் வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பதை கூட அவ்வளவு பொறுப்பாக இருந்து செய்யக் கூடியவர் என்றும், அதே சமயத்தில் அவர் அணிக்குள் இருந்தால் அணி சூழ்நிலை எப்பொழுதும் கலகலப்பாகவே இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிசிசிஐ சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கடுமையாக உழைத்திருக்கிறார். அவர் கிரிக்கெட் விளையாடுவதற்காக மட்டுமே வந்திருக்கிறார் என்பதை எடுத்துக் கூறி அவர்கள் பெற்றோர் அவரை மிகவும் உற்சாகப்படுத்தி தொடர்ந்து விளையாட வைத்திருக்கிறார்கள். இதனால் கிரிக்கெட் விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி தற்போது இந்திய டி20 அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஆகவே சில இன்னிங்ஸ்களில் மாறிவிட்டார்.
“நான் சந்தித்த பந்துவீச்சாளர்களில் மிகவும் கடினமானவர்களில் ஸ்பின்னர்கள் என்று எடுத்துக் கொண்டால் சாகல் பாயை சொல்லலாம். ஏனென்றால் எனக்கு எதிராக அவர் நிறைய பகுப்பாய்வு செய்து தெரிந்து கொண்டிருக்கலாம். அதே சமயத்தில் வேகம் பந்துவீச்சாளர்கள் என்றால் பும்ரா பாய் தவிர வேறு யார் இருக்க முடியும்? ஆனால் போகும் இடங்களில் எல்லாம் நான் இதை அவர் என் மேல் கோபப்படலாம்”
இதையும் படிங்க : பாகிஸ்தான் கூட நம்ம இந்தியா ஆடாதது நல்லது.. எனக்கு ரொம்ப சந்தோசம்.. காரணம் இதுதான் – மஞ்ச்ரேக்கர் பேச்சு
“உங்களுக்கு போட்டியில் விளையாடுவது போல பயிற்சிக்கு ஆடுகளங்கள் கிடைக்காது. அங்கு பந்து பல மாதிரி வரும். நீங்கள் பும்ரா பாய் வீசும் ஒரு பந்தை சரியாக விளையாடிவிட்டால் உடனே அடுத்த பந்து பவுன்சர்தான் வரும். அவர் வலை பயிற்சியில் மற்றவர்கள் போல சாதாரணமாக எல்லாம் நடந்து கொள்ள மாட்டார். மிகத் தீவிரமாகவே பந்து வீசுவார்” என்று கூறியிருக்கிறார்.