பாகிஸ்தான் கூட நம்ம இந்தியா ஆடாதது நல்லது.. எனக்கு ரொம்ப சந்தோசம்.. காரணம் இதுதான் – மஞ்ச்ரேக்கர் பேச்சு

0
6
Sanjay

தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியாவுடன் போட்டியில் விளையாடாது என்று அறிவித்திருக்கிறது. இதுகுறித்து சர்ச்சையாகி வரும் நிலையில் இது நல்ல விஷயம் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியிருக்கிறார்.

இரண்டு தினங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் அரசாங்கம் இந்திய அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட மாட்டோம் என அறிவித்தது. இதன் காரணமாக ஐசிசி அமைப்புக்கு நிறைய நஷ்டம் ஏற்பட இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்த பேச்சு வார்த்தைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி நடத்தி வருகிறது.

- Advertisement -

என்ன மாதிரியான தடைகள்

பாகிஸ்தான் அரசாங்கம் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் மேற்கொண்டு பெரிய அணிகள் எதுவும் பாகிஸ்தான் செல்லாது. மேலும் பாகிஸ்தான் பிஎஸ்எல் டி20 தொடருக்கு வெளிநாட்டு வீரர்கள் செல்ல மாட்டார்கள். இந்த இரண்டு தடை உத்தரவுகளையும் ஐசிசி பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை ஐசிசி இந்த இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்தால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கிரிக்கெட்டும் முடங்கிவிடும். ஏற்கனவே மிகவும் மோசமாக காணப்படும் பாகிஸ்தானின் கிரிக்கெட் இத்தோடு அழிந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ந்து இந்த விஷயத்தில் பிடிவாதம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது எனக்கு சந்தோஷம்

இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது ” இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில், போட்டித் தன்மை கொஞ்சம் கூட கிடையாது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிகவும் சிறிய அணி போல இருக்கிறது. போட்டிகள் ஒரு தலைப்பட்சமாக முடிவுக்கு வருகின்றன. அவர்களுடைய கிரிக்கெட் சீரழிந்து காணப்படுகிறது. எனவே அவர்களுடன் விளையாடாதது எந்த வகையிலும் எனக்கு நஷ்டமில்லை”

இதையும் படிங்க : டி20 உலகக் கோப்பை.. இந்த 4 டீம்தான் செமி பைனல் வரும்.. மற்றவர்களுக்கு வாய்ப்பே கிடையாது – மைக்கேல் வாகன் கணிப்பு

” மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் உடன் நாம் விளையாடும் போட்டிகள்தான் மிகவும் முக்கியமானது. ஒருவேளை நாம் 1990களில் பாகிஸ்தான் அணியை வென்றால் மகிழ்ச்சி அடையலாம். இப்போதுள்ள அணியை வெல்வது சாதாரண விஷயம். எனவே மிகத்திறமையான வீரர்களை கொண்டிருக்கும் இந்திய அணியை பாகிஸ்தான் அணிவுடன் ஒப்பிடவே கூடாது. அது தவறானது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -