நேத்து ஓப்பனிங் வர காரணம் இதுதான்.. WC-லும் தொடருமா.?.. உண்மையை உடைத்த இஷான் கிஷான்.!

0
5771

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற்று வந்தன. இந்தப் போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று கொழும்பில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி நடப்புச் சாம்பியன் ஆன இலங்கை அணியை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கை துவங்கிய இலங்கை அணி பெரும் 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி வேதனை அளித்தது. அந்த அணியின் குசால் மெண்டிஸ் மற்றும் ஹேமந்தா ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சிராஜ் 21 ரன்களுக்கு 6 விக்கெட்களையும் ஹர்திக் பாண்டியா 3 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்,

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 51 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் 6.2 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கில் 27 ரன்களுடனும் இஷான் கிஷான் 23 ரன்கள்டனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை தட்டி சென்றது இந்தியா.

ஆசிய கோப்பை போட்டிகளில் தொடர் நாயகனாக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார் மேலும் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக முஹம்மது சிராஜ் தேர்வானார். இந்தத் தொடரில் இந்தியாவின் முதல் போட்டியில் 66 ரண்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷான் மற்றும் கார்த்திக் பாண்டியா இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்தப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய இஷான் கிசான் 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இக்கட்டான சூழ்நிலையில் அணியை காப்பாற்றுவதற்காக ஹர்திக் பாண்டியா உடன் அவர் இணைந்த ஆடிய பொறுப்பான ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் இந்த போட்டியில் அவர் அதிரடியாகவும் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது கேஎல் ராகுலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்க உதவினார். இந்தப் போட்டியில் அவர் 33 ரன்கள் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் அதிரடியாக 23 ரன்கள் எடுத்த இஷான் கிஷான் இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேட்டியளித்தார். அதில் பேசியிருக்கும் அவர் ” எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் இன்று மிகச் சிறப்பாக செயல்பட்டனர். இந்த வெற்றியில் பெரும் பங்களிப்பை பந்துவீச்சாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். குறிப்பாக பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் இன்று மிகத் திறமையாக பந்து வீசினர். இந்த ஆடுகளத்தில் இரண்டாவது பேட்டிங் செய்வது மிகவும் கடினமான ஒன்று. எனினும் அனைத்து வகையான சவால்களுக்கும் தயாராகவே வந்திருந்தோம்” தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் துவக்க வீரராக களம் இறங்குவதையே எப்போதும் விரும்புகிறேன். இன்றைய போட்டியில் என்னை துவக்க வீரராக களமிறங்க கேட்டார்கள். நானும் உடனடியாக சரி என்று சொல்லி களம் இறங்கினேன். வெறும் 50 ரன்கள் தான் சேஸ் செய்ய வேண்டும் என்னும்போது என்ன செய்ய முடியும். எனக்கு இந்த வாய்ப்பு அளித்த கேப்டனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அணியில் எங்கள் ஒருவருக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கும் பொறுப்புகள் எங்களுக்கு தெரியும்.

உலகக்கோப்பைக்காக மிகச் சிறப்பான முறையில் தயாராகி வருகிறோம். இந்த ஆசிய கோப்பை போட்டி தொடர்களை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியுடன் ஒரு நாள் போட்டி தொடர் இருக்கிறது. அதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனாக களமிறங்குகிறேன் என தெரிவித்தார் இஷான் கிஷான். இதிலிருந்து உலகக் கோப்பை தொடரிலும் இஷான் கிஷான் மிடில் ஆர்டரில் களம் இறங்க இருப்பதை இந்தப் பேட்டியின் மூலம் மறைமுகமாக தெரிவித்திருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது யூகங்களை வெளியிட்டு இருக்கின்றனர். மேலும் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் துவக்க ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இஷான் கிஷான் தொடர்ந்து மிடில் ஆர்டரில் பயணிக்க வேண்டி இருக்கிறது