என்னோட “ரியல் கேம்” டெஸ்ட் தான்; முதல்முறையாக டெஸ்டில் இடம்பிடித்தபோது என்னோட அப்பா சொன்னது இதுதான் – மனம்திறந்து பேசிய இஷான் கிஷன்!

0
300

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து இஷான் கிஷன் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது.

- Advertisement -

ரிஷப் பண்ட் காலவரையறை இன்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார். ஆகையால் அந்த இடத்திற்கு அவருக்கு நிகராக அதிரடியாக விளையாடக்கூடிய இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவருக்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது குறித்து சக அணி வீரர் சுப்மன் கில் உடன் நடந்த உரையாடலில் இஷான் கிஷன் பலவற்றை பகிர்ந்துள்ளார். அப்போது தனது தந்தை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தான் உண்மையான கிரிக்கெட். அதில் தான் ஒரு வீரரின் முழுமையான திறமை வெளிக்கொண்டுவர முடியும். சோதிக்கவும் முடியும். உண்மையான சவால் இனிமேல் தான் காத்திருக்கிறது என்று கூறியதாக பகிர்ந்து கொண்டார்.

மேலும் பேசிய இஷான் கிஷன், “இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடப்போகிறேன் என நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது தந்தை உட்பட பலரும் டெஸ்ட் போட்டி உண்மையான கிரிக்கெட் போட்டி என்று பேசுகின்றனர். அதில் எனக்கு இடம் கிடைத்ததற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த அணியிலும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கை அணியுடன் நடந்த தொடரில் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் நியூசிலாந்து தொடரில் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அந்த இடத்தில் நிச்சயம் இஷான் கிஷன் விளையாட வைக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

- Advertisement -