முதல் டி20ஐ போட்டியின் முக்கிய சூழ்நிலையில் கேட்சை தவறவிட்ட ஷ்ரேயாஸ் ஐயர் ; அது குறித்து இஷான் கிஷன் பேட்டி

0
126
Ishan Kishan about Shreyas Iyer drop catch

தென் ஆப்பிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது!

இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற தென்ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்கள் அடிக்க, இறுதிக்கட்த்தில் 12 பந்துகளில் 31 ரன்களை ஹர்திக் பாண்ட்யா எடுக்க, இருபது ஓவர்களின் முடிவில் இந்தியா 211 ரன்களை குவித்தது.

- Advertisement -

அடுத்து களமிறங்கி தென் ஆப்பிரிக்க அணி முதல் மூன்று விக்கெட்டுகளை 81 ரன்களுக்கு இழந்து தடுமாற, அதற்கடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர், வான்டர் டூ டெசன் ஜோடி 131 ரன்களை குவித்து தென் ஆப்பிரிக்க அணியை வெல்ல வைத்தது. டேவிட் மில்லர் 31 பந்துகளில் 64 ரன்களை எடுத்தார். வான்டர் டூ டெசன் 46 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்யும் போது வான்டர் டூ டெசன் 30 பந்துகளில் 29 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அவர் அடுத்து ஹர்சல் படேலின் பந்தை 31வது சந்தித்து, டீப் மிட்விக்கெட் திசையில் அடிக்க, காற்றில் பறந்த பந்து ஸ்ரேயாஷ் கைகளில் எளிதாய் சென்று விழுந்தது. ஆனால் அந்த எளிமையான கேட்ச் வாய்ப்பை தவறவிட்டு விட்டார். இதற்குப் பிறகு வான்டர் டூ டெசன் 16 பந்துகளில் 46 ரன்களை குவித்தது, தென்ஆப்பிரிக்க அணி வெல்ல முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது!

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்துப் பேசியுள்ள இஷான் கிஷான் “நாம் ஒரு ஆட்டத்தில் தோற்பது ஒரு வீரரால் மட்டுமே அல்ல. கேட்ச்சை தவறவிட்டால் ஆட்டத்தை தவறவிடுவோம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதற்கடுத்து பந்துவீச்சு பீல்டிங்கில் மேலும் என்னென்ன தவறுகள் செய்தோம் என்று பார்க்க வேண்டும். ஒரு வீரரால் மட்டுமே ஒரு அணியைத் தோற்றகடிக்க முடியாது. எங்கள் பந்துவீச்சு துறையும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாங்ஙள் அடுத்த ஆட்டத்தில் வாலிமையாகத் திரும்பி வருவோம்” என்று விளக்கப்படுத்தி பேசியிருக்கிறார்!

- Advertisement -