இந்திய கிரிக்கெட்

நல்ல பார்ம்ல இருந்தும்.. நான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாததற்கு இதான் காரணம் – இஷான் கிஷான் ஓபன் டாக்

சையது முஸ்தாக் அலி டிராஃபி இறுதிப் போட்டியில் ஹரியானா மட்டும் ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜார்கண்ட் கேப்டன் இசான் கிசான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தான் இந்திய அணிக்கு தேர்வாகாததற்கான காரணம் குறித்து சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.

இந்தியா உள்நாட்டுத் தொடரில் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வந்த இசான் கிஷான் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இடம் பிடித்து தனது திறமையை உலகம் முழுக்க நிரூபித்தார். அதன் மூலமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து ஒரு சில போட்டிகளில் விளையாடி ஒரு நாள் தொடரில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இருப்பினும் அவரது இடம் நிரந்தரமாக அவருக்கு கிடைக்கவில்லை.

அவ்வப்போது வருவதும் போவதுமாய் இருந்த அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்து முழுவதுமாக ஓரம் கட்டப்பட்டு விட்டார். இந்த சூழ்நிலையில் சையது முஸ்தாக் அலி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் தான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாத குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணியில் தான் தேர்ந்தெடுக்கப்படாத போது மிகவும் வருத்தம் அடைந்தேன். ஏனென்றால் நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தேன் இந்த மாதிரியான ஆட்டத் திறனோடும் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் ஒருவேளை நான் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:ஒரு விஷயத்தை சூர்யா பாய் கேட்டா நல்லது.. இந்த போட்டிக்கு என்னுடைய பிளான் இதுதான் – திலக் வர்மா பேட்டி

ஒருவேளை நான் எனது அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ஒரு குழுவாக நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்” என்று பேசி இருக்கிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருவதன் மூலமாக மீண்டும் இந்திய அணியில் விட பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
Published by