“இஷான் கிஷான் சரியான இந்த வழியை கண்டுபிடிச்சிட்டார்.. அவரை விட்றாதிங்க!” – இந்திய முன்னால் வீரர் அதிரடியான கருத்து!

0
838
Ishan

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தற்பொழுது இளம் வீரர்களைக் கொண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியை புதியதாக உருவாக்கிக் கொண்டு வருகிறது.

மாறிவரும் உலக கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் வடிவம் மிகவும் முக்கியமான ஒரு வடிவமாக இருக்கிறது. மேலும் இந்த வடிவத்திற்கு என ஒரு தனி போட்டி அணுகுமுறை தேவைப்படுகிறது.

- Advertisement -

எனவே புதிய இளம் வீரர்களைக் கொண்டு புதிய அணுகு முறையில் வலிமையான ஒரு டி20 அணியை உருவாக்க வேண்டிய தேவை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஏற்கனவே டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு என ஒரு அதிரடியான அணியை உருவாக்கி எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறது.

தற்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சில நல்ல முடிவுகளை எடுத்திருக்கிறது. ஜெய்ஸ்வால் இஷான் கிஷான் இருவரையும் ஒரே அணியில் வைத்திருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் ஜெயிஸ்வாலை துவக்க ஆட்டக்காரராக விளையாட விட்டு இசான் கிஷானை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்து இருக்கிறது. இதனால் பவர் பிளே முடிந்து வரும் லெக் ஸ்பின்னர்களை அடித்து விளையாட வசதியாக இருக்கிறது.

இஷான் கிஷானும் ஆரம்பத்தில் சில பந்துகளை எடுத்துக்கொண்டு பிறகு அதிரடியாக விளையாடி நல்ல ஸ்ட்ரைக்ரேட்டில் ரன்கள் கொண்டு வருகிறார். அவர் இதற்கென ஒரு தனி ஆட்ட முறையை தற்பொழுது பின்பற்றுகிறார். இது அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.

இது குறித்து இந்திய முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறும் பொழுது “இஷான் கிஷானுக்கு இது முற்றிலும் மாறுபட்ட ஒரு பாத்திரம். அவர் இந்தியாவுக்காக ஒரு நாள் போட்டிகளில் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் விளையாடி பார்த்தோம். தற்பொழுது டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் வந்து விளையாடுகிறார். மேலும் முதலில் ஓபனராக இருந்தார்.

தற்போது அவர் இந்த இடத்தில் விளையாடுவதற்கு ஒரு வழிமுறையை கண்டுபிடித்திருக்கிறார். இது அவருக்கு வெற்றியை கொடுக்கிறது. அவர் முதலில் கொஞ்சம் பந்துகளை எடுத்துக் கொள்கிறார். இரண்டு ஆட்டங்களிலும் அதை செய்தார். இது அவருக்கு வெற்றியை கொடுத்து வருகிறது. அவர் ஒரு விக்கெட் கீப்பராக எந்த இடத்திலும் பேட்டிங் செய்யக் கூடியவராக அணிக்கு நெகிழ்வுத் தன்மையை தருகிறார்” என்று கூறியிருக்கிறார்!