பிளான் இதுதானா? கோலியின் சதத்தை தடுக்க வைட் பந்தை வீசினோமா? – பங்களாதேஷ் கேப்டன் பரபரப்பான பதில்!

0
3549
Najmul

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்!

நேற்றைய போட்டியில் விராட் கோலி அடித்த சதம் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 48வது சர்வதேச சதம் ஆகும். இன்னும் ஒரு சதம் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தத் தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சதத்தை நெருங்கி வந்து 85 ரன்கள் கொஞ்சம் தவறான ஷாட் விளையாடி துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்து இருந்தார். இல்லையென்றால் நேற்றைய சதமே சச்சினின் சத சாதனையை சமன் செய்ய போதுமானதாக இருந்திருக்கும்.

இந்த நிலையில் நேற்று விராட் கோலியின் சதத்திற்கும் அணியின் வெற்றிக்கும் ஒரே அளவில் ரன்கள் தேவைப்பட்ட நிலையில், குறிப்பிட்ட 20 ரன்களை விராட் கோலி மட்டுமே சேர்த்து, சதத்தையும் அடித்தார், அணியையும் வெற்றி பெற வைத்தார்.

இந்த நேரத்தில் அவரது சதத்தை தடுக்கும் நோக்கத்தில், பங்களாதேஷ் சுழற் பந்துவீச்சாளர் நசும் அகமத் வயது பந்து வீசினார் என்கின்ற கருத்து சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது. தற்பொழுது இதற்கு பங்களாதேஷ் கேப்டன் நஜுபுல் சாந்தோ பதில் அளித்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது
“இல்லை இல்லை அப்படி ஒரு திட்டம் கிடையவே கிடையாது. எந்த ஒரு பந்துவீச்சாளருக்கும் வைட் வந்து வீசவேண்டும் என்கின்ற எந்த திட்டமும் இல்லை. நாங்கள் சரியான ஆட்டத்தையே விளையாட முயற்சி செய்தோம்.

எங்கள் அணியின் தன்ஷித் ஹசனுக்கு சில ஆட்டங்கள் நன்றாக போகவில்லை. ஆனால் அவருக்கு இந்த ஆட்டம் சிறப்பான ஒன்றாக இருந்தது. அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவர் பெரிய ஸ்கோருக்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் அதைச் செய்வார் என்று நம்புகிறோம்.

மிடில் ஓவர்களில் எங்களால் நன்றாக பேட்டிங் செய்ய முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் இன்னும் சிறிது நேரம் பேட்டிங் செய்திருந்தால், போட்டி வேறு மாதிரியானதாக இருந்திருக்கும். ஒன்று, இரண்டு விக்கெட்டுகளை நாங்கள் எளிமையாக கொடுத்து விட்டோம். ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. ஆனால் பேட்டர்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ள தவறிவிட்டோம்!” என்று கூறியிருக்கிறார்!