இங்கிலாந்து தொடரில் விராட் கோலி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?.. என்ன மாற்றங்கள் வரலாம்

0
163
Virat

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட இந்த இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற்று இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக விலகிக் கொள்வதாக கூறி அணியிலிருந்து விலகினார்.

- Advertisement -

இந்த நிலையில் அவருடைய இடத்துக்கு ரஜத் பட்டிதார் கொண்டுவரப்பட்டார். மேலும் இவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் விலகியதால் வாய்ப்பும் கொடுக்கப்பட்டது.

மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்து இருக்கின்ற நிலையில், அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் மிக முக்கியமாக விராட் கோலி இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு வருவாரா? என்கின்ற கேள்வி மிக முக்கியமானதாக இருக்கிறது.

- Advertisement -

ஏனென்றால் விராட் கோலியின் நெருங்கிய நண்பரான ஏபி டிவில்லியர்ஸ் இது குறித்து பேசி இருக்கும் பொழுது, அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி அவர்களது இரண்டாவது குழந்தைக்காக எதிர்பார்த்து இருப்பதாகவும், அதனால் அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

எனவே குழந்தை பிறந்த பின்தான் விராட் கோலி இந்திய அணியுடன் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.அப்படி எந்த செய்தியும் இதுவரை வெளிவரவில்லை. மேலும் ராகுல் டிராவிட்டும் இதுகுறித்து உறுதியாக எதையும் கூறவில்லை. தேர்வுக்குழுவை கேட்பதுதான் சரி என்று பேசி இருந்தார்.

ஒருவேளை விராட் கோலி வராவிட்டால், கேஎல்.ராகுல் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், அவரை வைத்து விராட் கோலி இடத்தை நிரப்புவதற்கான முயற்சி செய்யப்படும்.

இதையும் படிங்க : “அடுத்த 3 டெஸ்ட் போட்டி.. நான் அந்த மாதிரி இன்னும் நிறைய செய்ய போறேன்” – ரோகித் சர்மா சவால்

ஒருவேளை விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் இருவருமே வராவிட்டால், ஸ்ரேயாஸ் ஐயரை நீக்க வேண்டிய அவசியம் இந்திய தேர்வுக்குழுவுக்கு வராது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்பராஸ் கான் இருவருமே இந்திய அணியில் தொடர்வார்கள் என்று தெரிகிறது. தற்போது விராட் கோலி விஷயத்தில் இந்த மாதிரி மட்டுமே நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.