இதுங்களும் சதி பண்ணுதே.. 327 நாட்கள் கழித்து கம் பேக் கொடுக்க வந்த பும்ராக்கு வந்த சிக்கல்.!

0
1801

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பிய இந்திய அணி தற்போது அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் டப்லிண் நகரில் இன்று முதலாவது டி20 போட்டியில் பல பரிட்சை நடத்த இருக்கின்றன .

ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியை கருத்தில் கொண்டு டி20 அணியில் இடம் பெற்று வரும் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இளம் வீரர்களை கொண்ட அணியை ஜஸ்ப்ரீத் பும்ரா வழி நடத்துகிறார் இந்த அணியில் ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா போன்ற ஐபிஎல் நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர் மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரும் அணியில் இடம் பெற்று இருக்கின்றனர்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா அணியுடன் காயத்தின் போது வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பத்து மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு முதுகில் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற் தகுதியை நிரூபித்த அவர் முக்கியமான ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாக பரிசோதனை ஓட்டமாக எல்லாம் தணிக்கு எதிரான போட்டியில் களம் இறக்கப்படுகிறார் .

இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர் . ஆனால் தற்போது சிக்கல் வேறொரு ரூபத்தில் வந்திருக்கிறது . அயர்லாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் போட்டி இன்று மாலை 3 மணிக்கு அயர்லாந்து நேரப்படி நடைபெற இருக்கிறது . அது இந்திய நேரப்படி இரவு 7 மணி ஆகும் . ஆனால் போட்டி நடைபெறும் டப்லின் நகரில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டி பெரும்பாலும் மழையால் கைவிடப்படும் சூழல் நிலவி வருகிறது .

- Advertisement -

அயர்லாந்து நாட்டின் வானிலை அறிக்கை படி போட்டியிட்டு தொடங்குவதாக கூறப்படும் மூன்று மணிக்கு 68% மழை பெய்வதற்கான வாய்ப்பு நான்கு மணிக்கு எண்பத்தி எட்டு சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு, இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 7:00 மணி முதல் எட்டு மணி வரை 100% மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது .

இதனால் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பங்கு பெற்று விளையாடும் முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகம் இருக்கின்றன. இதன் காரணமாக 327 நாட்கள் கழித்து பும்ரா தளத்தில் இறங்கி தன்னைப் பரிசோதனை செய்வதற்கு சிக்கலாக வானிலை அமைந்திருக்கிறது .