“ரோகித் பத்தி சொல்லியே ஆகனுமா?” – எல்லாத்தையும் கொட்டி தீர்த்த ஜெய் ஷா!

0
918
Rohit

இந்திய கிரிக்கெட் தற்பொழுது வளர்ச்சிப் பாதையில் மிக ஆரோக்கியமாகவே இருந்து வருகிறது. இந்திய அணிக்கு நிறைய வீரர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

தற்பொழுது இந்திய அணிக்கு இதே ஒரு நல்ல விதமான தலைவலியாகவும் மாறி இருக்கிறது. தற்பொழுது இந்திய டி20 அணிக்கு டாப் ஆர்டர் அதாவது முதல் மூன்று இடங்களில் விளையாட மட்டுமே ஆறு வீரர்கள் இருக்கிறார்கள். இதற்கு மொத்தமாக சேர்த்தே மூன்று வீரர்கள் மட்டுமே தேவை.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருக்கும் நிலையில், டாப் ஆர்டரில் விளையாடும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 கிரிக்கெட் குறித்து என்ன முடிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு செய்திருக்கிறது என்பது குறித்தும் தெரியவில்லை.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டை தீர்மானிப்பதில் தற்பொழுது பின்னடைவுகள் உருவாகி வருகிறது. இன்னொரு பக்கத்தில் வாய்ப்பை பெறும் இளம் வீரர்கள் எல்லோரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இதனால் யாரை தேர்வு செய்வது விடுவது என்கின்ற குழப்பம் நீடிக்கிறது.

மேலும் ஹர்திக் பாண்டியாவின் காயம் எந்த நிலையில் இருக்கிறது? டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வாரா? என்பது போன்ற முக்கிய கேள்விகளும் இருக்கிறது. இது குறித்து எல்லாம் நேற்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா இடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

இது குறித்து வெளிப்படையாக பேசிய அவர் “ஜனவரியில் இந்தியாவில் நடக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா உடல் தகுதியுடன் இருக்கலாம். தற்பொழுது அவர் என்சிஏ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது காயம் மற்றும் உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து நாங்கள் உங்களுக்கு நிச்சயம் கூறுவோம்.

தலைமை பயிற்சியாளராக ராகுல் டிரா வீட்டுக்கு நாங்கள் தற்பொழுது நீட்டிப்பு மட்டுமே கொடுத்திருக்கிறோம். எந்த காலம் வரையில் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எங்களுக்கு அதற்கான நேரம் இன்னும் கிடைக்கவில்லை. தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து அவர் திரும்பியதும் நாங்கள் இது குறித்து உட்கார்ந்து பேசி முடிவு செய்வோம்.

ரோகித் சர்மா குறித்து இப்பொழுதே தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கிறது? டி20 உலகக்கோப்பை ஜூன் மாதம் துவங்குகிறது. இதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஐபிஎல் இருக்கிறது. எல்லாம் பார்த்துவிட்டு முடிவு செய்யப்படும்!” என்று கூறியிருக்கிறார்!