ஒவ்வொரு போட்டிக்கும் ஆடுகளத்தை முடிவு செய்வது பிசிசிஐயா? ஐசிசியா?.. தெரியாத ஆச்சரியமான உண்மைகள்!

0
323
ICC

தற்போது 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த வார முடிவில் அரை இறுதிக்கான அணிகள் எவை என்பது குறித்து ஒரு அளவுக்கு தெரிந்து விடும்.

உலகக் கோப்பை தொடர் என்கின்ற பொழுது அதற்கு பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறித்து ரசிகர்களுக்கு எப்பொழுதும் ஒரு சந்தேகம் இருந்து வருகிறது.

- Advertisement -

அதாவது தற்பொழுது உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகின்ற காரணத்தினால் ஆடுகளத் தயாரிப்பு பிசிசிஐ கையில் இருக்குமா இல்லை ஐசிசி பொறுப்பில் இருக்குமா என்பது குறித்து சந்தேகம் இருக்கும்.

உண்மையில் ஆடுகளத்திற்கான பொறுப்பு அந்த குறிப்பிட்ட மைதானத்தின் ஊழியர்களுக்குத்தான் உண்டு. ஆடுகளங்களை அவர்களே தயாரிப்பார்கள். தொடரை நடத்தும் நாடு மைதானத்தை மட்டும்தான் தேர்வு செய்ய முடியும்.

அதே சமயத்தில் ஆடுகளத்தின் பயன்பாட்டை முடிவு செய்வது ஐசிசியால் நியமிக்கப்பட்ட போட்டி நடுவர்கள்தான். மேலும் இவர்கள் போட்டி நடந்து கொண்டிருக்கும் பொழுது ஆடுகளம் வீரர்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்றால், போட்டியை இடை நிறுத்தவும் உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் ஒவ்வொரு போட்டியின் ஆடுகளம் குறித்தும் ஐசிசிக்கு அறிக்கை கொடுப்பதற்காக மேட்ச் ரெப்ரி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஆடுகளம் குறித்துக் கொடுக்கும் அறிக்கைகளின் படி ஐசிசி செயல்படுகிறது.

மேட்ச் ரெப்ரி ஆடுகளம் மோசமாக இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தால், ஐசிசி அந்த குறிப்பிட்ட மைதானத்தின் மீது நடவடிக்கை எடுக்கும். தரவரிசை புள்ளிகளை குறைக்கும். மேலும் சர்வதேச போட்டிகள் நடத்த தடையும் விதிக்கும்.

உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டிக்குமான ஆடுகளம் என்பது அந்தத் தொடரை நடத்தும் நாட்டின் கிரிக்கெட் வாரிய பொறுப்பில் கிடையாது. மைதான ஊழியர்கள் பொறுப்பில் மட்டுமே உண்டு. மேலும் ஆடுகளப் பயன்பாடு நடுவர்கள் முடிவு செய்யக்கூடியது. தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆடுகளம் குறித்து எதிலும் தலையிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது!