தோனிய நேர்ல பார்த்தேன்.. 2 மணி நேரம் ஒரு மேஜிக் பண்ணினாரு.. நல்ல நியூஸ் இருக்கு – இர்பான் பதான் பேச்சு

0
76
Dhoni

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மிகக் கோலாகலமாக இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் 17வது ஐபிஎல் டி20 லீக் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மாலை துவங்கும் இந்த போட்டிக்கு முன்பாக துவக்க விழாவும் நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தொடர்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக டபுள் ரோல் இன்று சூசகமாக ஒரு சமூக வலைதள பதிவு அவர் பக்கத்தில் இருந்து வந்தது. இதன் காரணமாக மீண்டும் அவர் புதிய கேப்டனை கொண்டு வருகிறார் என்று பலராலும் பேசப்பட்டது.

- Advertisement -

ஆனால் தற்போது வரையில் அப்படிப்பட்ட எந்த செய்தியும் வெளியில் வராத காரணத்தினால், மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடரப் போகிறார் என்பது உறுதியான ஒன்றாக மாறியிருக்கிறது. மேலும் சுரேஷ் ரெய்னா போன்றவர்கள் மகேந்திர சிங் தோனியால் இன்னும் ஐந்து ஆண்டுகள் கூட விளையாட முடியும் என்று கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்கள்.

தற்பொழுது 42 வயதாகும் மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து இதுவரையில் ஐந்து கோப்பைகளை கைப்பற்றி இருக்கிறார். ஒரு அணியை அதிக கேப்டனாக வழி நடத்தியது, கேப்டனாக அதிக வெற்றிகள் என இதுவரையில் ஐபிஎல் சாதனைகள் பல அவரது கைவசம் இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு தோனியைச் சந்தித்தேன்

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் சமீபத்தில் தோனியைச் சந்தித்ததையும், அவரது உடல் தகுதி எப்படி இருக்கிறது என்றும், அவரால் எப்படி விளையாட முடியும் என்றும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து இர்பான் பதான் கூறும் பொழுது “கடந்த வருடம் தான் தொடர்ந்து விளையாடப் போவதில் மூலமாக ரசிகர்களுக்கு பரிசு வழங்குவதாக தோனி கூறி இருந்தார். சில நாட்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்தேன். அவர் பிக்கில் பந்தில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் இடைவிடாமல் விளையாடினார். அவரதுமுழங்கால் எப்பொழுதும் போல சிறப்பாக இருக்கிறது. இது ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் செய்தி. மேலும் பழைய தோற்றத்திலும் வந்திருக்கிறார். பழைய தோனியையும் நம்மால் பார்க்க முடியுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : சர்பராஸ் கான் அப்பா கூடவும் விளையாடி இருக்கேன்.. அவர் செம பேட்ஸ்மேன் – ரோகித் சர்மா வெளியிட்ட சுவாரசிய தகவல்

கடந்த இரண்டு வருடங்களில் அவருடைய ரோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங்கில் மாறிவிட்டது. தற்பொழுது அவர் லோயர் ஆர்டரில் வருகிறார் சில பந்துகளை மட்டுமே விளையாடுகிறார். ஆனால் பெரிய ஷாட்களை அடிக்கிறார். அது ஒரு சிறிய இன்னிங்ஸ் ஆக இருந்தாலும் கூட மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதில் எந்தவிதமான மாற்றமும் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும் அவர் கேப்டனாக இருப்பதில் ஆர்வம் காட்டுகிறார். எனவே எல்லாம் நன்றாகவே செல்லும்” என்று கூறியிருக்கிறார்.