அபிஷேக் ஷர்மாவின் இந்த வீக்னஸ் பத்தி.. நான் யுவராஜ் சிங்கிட்ட பேச போறேன் – இர்பான் பதான் சுட்டிக்காட்டல்

0
67
Abhishek

அபிஷேக் ஷர்மாவின் ஒரு குறிப்பிட்ட பேட்டிங் அணுகுமுறை தொடர்பாக அவரது பயிற்சியாளர் யுவராஜ் சிங்கிடம் தான் பேச இருப்பதாக இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது அபிஷேக் சர்மாவுக்கு கொடுக்கப்பட்டது. ஆனாலும் எதிர்காலத்தில் அபிஷேக் ஷர்மா பேட்டிங் திட்டத்தில் சில மாறுதல்களை கொண்டு வர வேண்டும் என இர்பான் பதான் விரும்புகிறார்.

- Advertisement -

எல்லோரும் பார்க்க ஆரம்பிப்பாங்க

இது குறித்து இர்பான் பதான் பேசும் பொழுது ” அபிஷேக் ஷர்மா ஆஸ்திரேலியா டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். அவர் தொடர்ந்து அச்சமின்றி விளையாடி வருகிறார். ஆனால் நாம் இருநாட்டு தொடர் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆசியக் கோப்பையில் பல நாடுகள் பங்கு பெற்று இருந்தாலும் கூட உலக கோப்பைக்கு இன்னும் சிறப்பாக வருவார்கள் என்பதுதான் உண்மை”

“அபிஷேக் ஷர்மா ஒவ்வொரு முறையும் இறங்கி வந்து எல்லா பந்துவீச்சாளர்களையும் விளையாடுகிறார் என்றால், அவருக்கு எப்படி பந்து வீசலாம் என எல்லா அணிகளும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கி விடும். அவர் இந்த விஷயத்தில் கொஞ்சம் புத்திசாலித்தனமாக தேர்வுகளை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக இந்திய அணி நிர்வாகமும் யோசிக்க வேண்டும். நான் இது குறித்து யுவராஜ் சிங்கிடம் பேசப் போகிறேன்”

- Advertisement -

அபிஷேக் ஷர்மாவுக்கு தெரியும்

” தன்னால் ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் இறங்கி வந்து எல்லா நேரத்திலும் அடித்துக் கொண்டிருக்க முடியாது என அபிஷேக் ஷர்மா உணர்ந்து இருப்பார். எனவே வேறு விதமான திட்டமிடல்கள் சிறந்த முறையில் இருக்க வேண்டும். நேற்று அவர் பேட்டிங் செய்த பொழுது இரண்டு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். அதில் ஒன்றைப் பிடித்திருந்தாலும் அவரது ஆட்டம் அங்கேயே முடிந்திருக்கும்”

இதையும் படிங்க : 88/8.. வெஸ்ட் இண்டீஸ் காட்டிய மாஸான போராட்டம்.. நியூசி சொந்த மண்ணில் திணறல்.. மீண்டும் அதே முடிவு

“அபிஷேக் ஷர்மா இதில் கவனம் செலுத்துவார் என நான் நம்புகிறேன். ஆஸ்திரேலியா தொடரில் நாதன் எல்லீஸ் அவருக்கு நிறைய தொந்தரவுகள் கொடுத்திருக்கிறார். அபிஷேக் ஷர்மா தொடர்ந்து வெளியேறி வந்து விளையாடினால், அவருக்கு பந்தின் லைனை மாற்றுதல் மற்றும் வேகத்தை குறைத்தல் என பல வகைகளில் எதிரணிகள் வேலை செய்யும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -