இந்திய கிரிக்கெட்

அபிஷேக் ஷர்மாவுக்கு அதற்கு உடனடியா இதையும் செய்யணும்.. அவரால் பெரிய தாக்கத்தை உண்டாக்க முடியும் – இர்பான் பதான் பேச்சு

தற்போது அபிஷேக் ஷர்மாவுக்கு கூடுதலாக இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்வுக்குழுவுக்கு இர்பான் பதான் கோரிக்கை வைத்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மாவின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. 35 பந்துகளை எதிர் கொண்ட அவர் 84 ரன்கள் குவித்தார். ஆனால் சதத்தைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அடிக்க சென்று ஆட்டம் இழந்தார்.

அபிஷேக் ஷர்மா கருத்து

தனக்கு எதிரணிகள் எவ்வாறான திட்டத்தை கொண்டு வருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதின் மூலமாக, தான் எவ்வாறு விளையாட வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியும் என்றும், தன்னிடம் அதிக ஷாட் இல்லை எனவும் அபிஷேக் ஷர்மா வெளிப்படையாக கூறியிருந்தார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது ” நான் பேட்டிங் செய்யும் வீடியோக்களை எடுத்து பார்த்தால் எனக்கு எதிரணிகள் எப்படி ஆன இடத்தில் பந்து வீச திட்டமிடுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் நான் எப்படி விளையாட வேண்டும் என்றும் புரிந்து கொள்ளலாம். மேலும் எனக்கு அதிக ஷாட் கிடையாது. ஆனால் குறைந்த ஷாட்டுகளை வைத்தே என்னால் சிறப்பாக விளையாட முடியும்” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இர்பான் பதான் கோரிக்கை

தற்போது அபிஷேக் ஷர்மா டி20 கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே இந்திய அணிக்காக இடம் பெற்று வருகிறார். ஆனால் இவர் விளையாடும் விதத்தில் இவர் சிறந்த வெள்ளைப் பந்து வீரராக வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இதையும் படிங்க : பங்களாதேஷ்க்கு ஆதரவாக பாகிஸ்தானும் டி20 உகோல் ஆடக்கூடாது.. பிசிசிஐ அதிகாரத்தை முடிக்கணும் – ரஷீத் லத்தீப் பேட்டி

இதுகுறித்து இர்பான் பதான் கூறும் பொழுது ” 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான பரிசீலனையில் அபிஷேக் சர்மா பெயரும் இருக்க வேண்டும். தற்போது ஜெய் ஸ்வால் மற்றும் ருதுராஜ் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன. ஆனால் டி20 கிரிக்கெட் போலவே பவர் பிளேவை முழுவதுமாக ஒருநாள் கிரிக்கெட்டில் பயன்படுத்தினால் பெரிய தாக்கத்தை உண்டாக்க முடியும். அபிஷேக் ஷர்மாவால் நிச்சயம் இதைச் செய்ய முடியும். எனவே அவரை விட்டுவிடக் கூடாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by