ரோகித் கோலியை பார்த்து பாபர் அசாம் இந்த விஷயத்துல கத்துக்கணும்.. இல்லனா கஷ்டம் – ரஷித் லத்தீப் கருத்து

0
69
Latif

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பையை பாபர் ஆசம் தலைமையில் பாகிஸ்தான் அணி எதிர்கொள்ள இருக்கிறது. தற்போது இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் பேசியிருக்கிறார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் வெளியேறி மீண்டும் அவரையே டி20 உலக கோப்பைக்கு கேப்டனாக கொண்டு வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்து அவருக்கு கேப்டன் பொறுப்பு சரியில்லை என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து கூறி இருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் ” ஜூன் ஒன்பதாம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பெரிய கவனம் செலுத்தி வருகிறது. டி20 உலக கோப்பையில் கவனம் செலுத்த முடியாமல் இந்தியா அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து பாபர் அசாம் கேப்டனாக அழுத்தத்தில் இருப்பார்.

பாபர் அசாம் அழுத்தத்தை சுமப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். இதை அவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா விராட் கோலி இடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அழுத்தத்தை தாண்டி போட்டியை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரியும். பாபர் அசாம் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் ஒரு கேப்டனாக அவர் அறிந்து கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.

பாபர் அசாம் ஒரு சிறந்த வீரர் ஆனால் அவரைச் சுற்றி விளையாடுவதற்கு நல்ல வீரர்கள் இல்லை. ரிஸ்வான் மற்றும் பகாத் ஜமான் எப்பொழுது அவருக்கு நல்ல சப்போர்ட் தருகிறார்கள். ஆனால் தொடர்ந்து செய்வதற்கான வீரர்கள் இல்லை. ஆனால் விராட் கோலிக்கு அவரது அணி இடம் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கிறது. இந்த விஷயம் பாபர் அசாமுக்கு எதிராகச் செல்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 30 நிமிடம் இது நடந்தா போதும்.. பாகிஸ்தான் அணிக்கு சம்பவம் பண்ணிடுவோம் – அமெரிக்க அணி கேப்டன் பேட்டி

பாகிஸ்தான் அணி ஐசிசி போட்டிகளில் சிறப்பாகவே செயல்படுகிறது. ஆனால் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இருந்தது போல் தற்பொழுது பாகிஸ்தான் அணி தயாராக இல்லை. 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த அணியை பாதித்திருக்கிறது. தற்பொழுது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யார் என்றே தெரியவில்லை. அவர்கள் முயற்சி செய்த விஷயங்கள் படுதோல்வி அடைந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.