பாகிஸ்தான் சொன்ன புகார்.. ஐசிசி உடனடி நடவடிக்கை.. இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கோபம்

0
20
ICC

தற்போது ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரு நாடுகளில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. தற்போது இதில் பங்கு பெறும் பெரிய ஆசிய கிரிக்கெட் நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஐசிசி செயல்பாடுகள் குறித்து சில புகார்களை முன்வைத்திருந்தது.

இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் சுற்றில் நான்கு ஆட்டங்களையும் அமெரிக்கா நியூயார்க் மைதானத்தில் 3 மற்றும் டல்லாஸ் மைதானத்தில் ஒன்று என விளையாடி முடிகிறது. இதற்குப் பிறகு இரண்டாவது சுற்று விளையாட வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணி முதலில் விளையாடும் நியூயார்க் மைதானத்தில் இந்திய அணிக்கு பயிற்சி போட்டி கொடுக்கப்பட்டது. மேலும் அயர்லாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய முதல் போட்டிக்கு, பயிற்சி போட்டியில் விளையாடிய அதே ஆடுகளம் கொடுக்கப்பட்டது. மேலும் இந்திய அணி ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு பத்து நிமிடத்தில் வரக்கூடிய அளவில் பக்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதே சமயத்தில் இலங்கை அணியின் கேப்டன் ஹசரங்கா தங்கள் அணியினர் ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு வருவதற்கு ஒன்றரை மணி நேரங்கள் ஆகிறது என்றும், இதன் காரணமாக தங்களால் பயிற்சிகளில் ஈடுபடுவதில் நேரம் விரயமாகிறது என்றும் புகார் கூறியிருந்தார்.

இதே புகாரை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகமும் ஐசிசி இடம் தெரிவித்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொக்சின் நக்வி இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டார். இதன் காரணமாக ஐசிசி பத்து நிமிடத்தில் ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு செல்லும் வகையில் ஹோட்டலை மாற்றி உடனடியாக கொடுத்து இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் கோலியை பார்த்து பாபர் அசாம் இந்த விஷயத்துல கத்துக்கணும்.. இல்லனா கஷ்டம் – ரஷித் லத்தீப் கருத்து

தற்போது பாகிஸ்தான் அணி நிர்வாகம் கூறிய புகார் இருக்கு உடனடியாக ஐசிசி நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால் இலங்கை கேப்டன் கூறிய இதே புகாருக்கு ஐசிசி இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது. அவர்கள் ஐசிசி எல்லோருக்கும் ஒரே மாதிரி நடந்து கொள்வதில்லை என தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.