“இந்த ஒரு விஷயத்தை செய்து காட்ட விராட் கோலியைத் தவிர வேறு எந்த கேப்டனாலும் முடியாது” – இர்பான் பதான் புகழாரம் !

0
413

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பெங்களூர் அணி தனது மூன்றாவது வெற்றியையும் டெல்லி அணி தனது முதல் வெற்றியும் பதிவு செய்துள்ளனர்.

நேற்று மதியம் நடைபெற்ற முதலாவது போட்டியில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு பெங்களூர் அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார். இதில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 20 அவர்களின் 174 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. விராட் கோலி 59 ரண்களும் டூப்லெஸ்சி 84 ரன்கள் எடுத்தனர்

- Advertisement -

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 150 ரன்கள் ஆல் அவுட் ஆகிய 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பெங்களூர் அணியின் பந்துவீச்சில் முகமது சிராஜ் நான்கு விக்கெட்டுகளையும் ஹசரங்க இரண்டு விக்கீட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்தப் போட்டி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் விராட் கோலியின் கேப்டன் சி ஐ வெகுவாக பாராட்டி இருக்கிறார். இதுகுறித்து ஸ்டார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் “நேற்றைய போட்டியின் போது விராட் கோலியின் கேப்டன்சி மிகவும் திறமையாக இருந்தது. அவர் வீரர்களை வழிநடத்திய விதம் மற்றும் முழு ஆற்றலுடன் மைதானத்தில் வளம் வந்தது அணியில் இருக்கும் அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது அந்த உத்வேகம் அவர்களின் ஆட்டத்தில் பிரதிபலிப்பதை நம்மால் காண முடிகிறது” என தெரிவித்திருக்கிறார்,

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய இர்பான் பதான் “ஆட்டத்தின் போது அவர் செய்த ஒரு சில திட்டமிட்ட மாறுதல்கள் பெங்களூர் அணிக்கு நல்ல முடிவுகளை பெற்று தந்தன. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் சுழற் பந்துவீச்சாளரான ஹசரங்காவை வீச வீசவைத்து ஆஸ்திரேலியா வீரரான மேத்யூ சார்ட் விக்கெட்டை எடுத்தது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததாக குறிப்பிட்டார்.

- Advertisement -

விராட் கோலியின் தலைமை பண்பு குறித்து பேசிய இர்பான் பான் “விராட் கோலி அணிக்குள் எடுத்து வரும் எனர்ஜி மற்ற வீரர்களுக்கும் உத்வேகத்தை தருவதாக இருக்கிறது. ஆர் சி பி அணி இதற்கு முன் ஆடியோ விதத்தையும் இந்தப் போட்டியில் அவர்கள் களத்தில் நடந்து கொண்ட விதத்தையும் வைத்து பார்க்கும் போது விராட் கோலியின் கேப்டன்சி எந்த மாதிரியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நம்மால் காண முடிகிறது என குறிப்பிட்டார் இர்ஃபான் பதான்.