தோனி, ஜெய்ஸ்வால்-க்கு இடமில்லை… ஐபிஎல் 2023 பெஸ்ட் பிளேயிங் லெவனை உருவாக்கிய இர்பான் பதான்! – விராட் கோலிக்கு ஓபனிங்கில் இடமில்லை!

0
980

2023 ஐபிஎல் சீசனில் இருந்து சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார் இர்பான் பதான். அணி விவரம் மற்றும் எதனடிப்படையில் எடுக்கப்பட்டனர் என்பதை பின்வருமாறு காண்போம்.

முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் 2023 ஐபிஎல் சீசனில் அபாரமாக செயல்பட்ட வீரர்களை எடுத்து சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார். இவர் தனது அணியில் ஓபனிங் வீரர்களாக ஃபாஃப் டு பிளசிஸ் மற்றும் ஷுப்மன் கில் இருவரையும் தேர்வு செய்துள்ளார். டு பிளசிஸ் 8 அரைசதங்கள் உட்பட 730 ரன்களை 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். ஷுப்மன் கில் கனவு சீசனாக முடித்தார். 4 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் உட்பட 890 ரன்களை கிட்டத்தட்ட 160+ ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். ஜெயிஸ்வால், டெவான் கான்வெ ஆகியோரும் அபாரமாக செயல்பட்டனர். ஆனால் இவர்களை எடுக்கவில்லை.

- Advertisement -

சீசன் முழுவதும் ஓபனிங்கில் இறங்கி கலக்கிய விராட் கோலியை 3ஆவது இடத்தில் விளையாடுவதற்கு எடுத்தார் இர்பான் பதான். 6 அரைசதங்கள் மற்றும் 2 சதங்கள் உட்பட 639 ரன்கள் குவித்தார். 4ஆவது இடத்திற்கு சூரியகுமார் எடுக்கப்பட்டுள்ளார். 1 சதம் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட 605 ரன்களை 180+ ஸ்ட்ரைக் ரேட்டில் அசத்தினார்.

5ஆவது இடத்திற்கு ஹென்றிச் க்ளாசனை எடுத்துள்ளார். மிடில் ஆர்டரில் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கினார். ஸ்பின் ஓவரில் 19 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 6ஆவது இடத்திற்கு ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீசன் முழுவதும் இவரது பினிஷிங்கை பேசாத ஆளே இல்லை.

ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் ரஷித் கான் இருவரும் உள்ளனர். பந்துவீச்சில் இவர்களது பங்களிப்பு சீசன் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருவர் ஆடும் அணியை பைனலுக்கும் எடுத்து வந்துள்ளனர்.

- Advertisement -

வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ் இருவரும் பவர்-பிளே ஓவர்களில் அசத்தினர். டெத் ஓவர்களில் மிரட்டுவதற்கு பத்திரனா மற்றும் மோகித் சர்மா இருவரையும் எடுத்திருக்கிறார் இர்பான் பதான். 11 பேர் + இம்பாக்ட் வீரர் உட்பட 12 பேர் கொண்ட அணி இதுதான்.

இர்பான் பதான் தேர்வு செய்த ஐபிஎல் 2023 பெஸ்ட் பிளேயிங் லெவன்:

  1. பாப் டு பிளசிஸ்
  2. ஷுப்மன் கில்
  3. விராட் கோலி
  4. சூரியகுமார் யாதவ்
  5. ஹென்றிச் க்ளாசன்
  6. ரிங்கு சிங்
  7. ரவீந்திர ஜடேஜா
  8. ரஷித் கான்
  9. முகமது ஷமி
  10. முகமது சிராஜ்
  11. மோகித் சர்மா
  12. மதிஷா பத்திரனா(இம்பாக்ட் வீரர்)