இந்திய கிரிக்கெட் அணி விரைவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அனைவரும் மிக தீவிரமான முறையில் தயாராகி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. அடுத்ததாக வருகிற ஒன்பதாம் தேதி முதல் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள நிலையில் அதற்கு பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பணிச்சுமை மேலாண்மை காரணமாக நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான தொடர்களில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதற்கு காரணம் இந்த இரண்டு தொடர்களுக்குப் பிறகு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஷ் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால் இவர் இந்த முக்கிய முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து தனது கருத்தை ஓப்பனாக பேசி இருக்கும் இர்பான் பதான் ஒரு முக்கிய தொடரில் பணிச்சுமை மேலாண்மையை நிர்வகிக்க அந்த தொடரில் இருந்து விலகுவது உங்களுக்கு நல்ல பலனை தராது எனவும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போதும் கம்மின்ஸ் இதே மாதிரி தனது பணிச்சுமை மேலாண்மையை நிர்வகிப்பாரா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “பணிச்சுமை மேலாண்மை பற்றி இப்போது நிறைய பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்போது இந்தியாவின் பும்ரா அல்லது வேறு எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் பணிச்சுமை மேலாண்மை நிர்வகிக்கிறார்கள். எனவே மற்ற வீரர்களும் அதுபோன்று செய்ய வேண்டும். இந்தியாவில் பிசிசிஐ மற்றும் என்சிஏவிடம் இருந்து இதற்கு சிறப்பான அமைப்பு உள்ளது. பணிச்சுமை மேலாண்மை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. எனக்கு இப்போது ஒரே ஒரு கேள்வி மட்டுமே உள்ளது.
இதையும் படிங்க:49 ரன் 8 விக்கெட்.. ODI கிரிக்கெட்டை மறந்த இங்கிலாந்து.. புரட்டி எடுத்த தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியா அணியின் கம்மின்ஸ் ஆசஸ் தொடருக்காக பணிச்சுமை மேலாண்மையை நிர்வகிக்கும் விதமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆசஸ் தொடரின் போதும் கம்மின்ஸ் இதே போன்று பணிச்சுமை மேலாண்மையை நிர்வகிப்பாரா? எனது கேள்வி அதுதான், நீங்கள் எல்லா வகையிலும் ஒரே மாதிரியான மனநிலையை கொண்டிருக்க வேண்டும். ஒரு சிறந்த தொடர் நடைபெறும் போது நீங்கள் ஆட்டங்களை தவிர்த்தால் அது உங்களுக்கு பலன் தராது” என்று அவர் பேசி இருக்கிறார்.






