49 ரன் 8 விக்கெட்.. ODI கிரிக்கெட்டை மறந்த இங்கிலாந்து.. புரட்டி எடுத்த தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி

0
450
England

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

தற்பொழுது பெண் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

- Advertisement -

சுருண்ட இங்கிலாந்து

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த இளம் வீரர் ஜேமி ஸ்மித் அதிரடியாக விளையாடி அரைசதம் 48 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 5 ரன்னில் வெளியேறினார்.

ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணி 82 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து பலமான நிலையில் இருந்தது. இதற்கு அடுத்து வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. நட்சத்திர வீரர்கள் ரூட் 14, கேப்டன் ஹாரி புரூக் 12, முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் 15 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். கேசவ் மஹாராஜ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

பேட்டிங்கில் அதிரடி

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மார்க்ரம் 55 பந்தில் 86 ரன்கள், ரியான் ரிக்கல்ட்டன் 59 பந்தில் 31 எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 20.5 ஓவர்களில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : மிட்சல் ஸ்டார்க் டி20 கிரிக்கெட்டில் திடீர் ஓய்வு.. பின்னணியில் ரோகித் சர்மா.. உண்மை காரணங்கள் என்ன?

தற்போது இங்கிலாந்து மூன்று வகை கிரிக்கெட்டையும் அதிரடியாக விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. இதன் காரணமாக விக்கெட்டான நேரத்தில் பொறுமையாக விளையாடிய போட்டியை வெல்லும் திறனை இழந்திருக்கிறது. இதனால் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் சறுக்கலை சந்தித்து வருகிறது.

- Advertisement -