தோனி சொன்ன இந்த மந்திரம்தான்.. நேற்று சிஎஸ்கேவை முடிச்சுவிட உதவி பண்ணுச்சு – மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் பேட்டி

0
198
Dhoni

சிஎஸ்கே அணிக்கு எதிராக, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் சிறப்புமிக்க லக்னோ அணியின் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ். அவர் தன்னுடைய பேட்டிங் சிறப்பாக இருந்ததற்கு காரணம் தோனி சொன்ன ஒரு மந்திரம்தான் என்று கூறியிருக்கிறார்.

நேற்று சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்யும்பொழுது ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது. இதன் காரணமாக ஆடுகளத்தில் பந்துகள் நின்று வந்தன. எனவே பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. ஆனாலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் ஆடுகளத்தின் தன்மையை சமாளித்து அபாரமாக 60 பந்தில் 108 ரன்கள் ஆட்டம் இழக்காமல் குவித்தார். சிஎஸ்கே அணி 210 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு நட்சத்திர துவக்க ஆட்டக்காரர்கள் பெரிய ரன்கள் இல்லாமல் உடனுக்குடன் வெளியேறினார்கள். இதன் காரணமாக நேற்றைய போட்டியில் லக்னோ அணி மூன்றாவது இடத்தில் மார்க்கஸ் ஸ்டோய்னிசை அனுப்பியது. வழக்கமாக அவர் மிடில் ஆர்டரின் கடைசியில் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அவர் இறுதிவரை களத்தில் நின்ற அவர் 63 பந்துகளை சந்தித்து 124 ரன்கள் எடுத்து லக்னோ அணியை வெல்ல வைத்தார். சேப்பாக்கம் மைதானத்தில் மிக அதிகபட்ச ரன் சேஸ் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் வரலாற்றில் ரன் சேஸ் செய்த பொழுது ஒரு தனி பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்னும் இதுதான். சிஎஸ்கே அணியை அதன் கோட்டையில் வீழ்த்தி இருப்பது சாதாரண விஷயம் கிடையாது. குறிப்பாக அந்த அணி 210 ரன்கள் எடுத்த போது வெற்றி பெற்று இருப்பது மிகவும் சிறப்பானது.

இது குறித்து பேசி இருக்கும் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் கூறும்பொழுது “தோனி என்னிடம் ஒரு விஷயத்தை சொன்னார். பெரிய போட்டிகளில் விளையாடும் பொழுது நாம் கூடுதலாக எதையாவது செய்வோம் அல்லது வித்யாசமாக எதையாவது செய்வோம் என்று வெளியில் இருந்து எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நாம் அங்கேயே அந்த சூழ்நிலைக்கு எதையும் செய்யாமல் எப்பொழுதும் போல் இருக்க வேண்டும் என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ருதுராஜ் பத்தி இந்த விஷயம் யாருமே பேசல.. ஆனா கண்டிப்பா இதை எல்லாருமே பேசனும் – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

அவர் அழுத்தமான சூழ்நிலைகளில் உள்ளே வந்து எதையும் கூடுதலாகவோ வித்தியாசமாகவோ செய்யாமல், தன்னை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே நிற்கிறார். இதுதான் வெற்றி பெற உதவுகிறது. இந்த மந்திரத்தைதான் தோனி எனக்கு கூறினார். இதைத்தான் நான் நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் செய்தேன்” என்று தெரிவித்திருக்கிறார்.