“6வது கியரும் இருக்க ஆட்டோமேட்டிக் கார் மாதிரி இந்த இந்திய வீரர்.. இவரை யூஸ் பண்ணனும்” – இர்பான் பதான் பேச்சு

0
70
Irfan

இந்த வருடத்தில் மே மாதம் இறுதியில் ஐபிஎல் தொடர் முடிவடைந்து, ஜூன் மாதம் ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலக கோப்பை தொடர் துவங்க இருக்கிறது.

தற்பொழுது இதற்கான இந்திய அணி கட்டமைப்பில் விக்கெட் கீப்பர்களுக்கான இடம் பேட்டிங் செய்வதற்கு மிடில் வரிசையில்தான் இருக்கிறது.

- Advertisement -

முன்பு இஷான் கிஷான் மாற்று துவக்க ஆட்டக்காரராகவும், இரண்டாவது விக்கெட் கீப்பர் ஆகவும் அணியில் இடம் பெற்று இருந்தால். ஒரு வீரர் மூலமாக இரண்டு இடங்கள் நிரப்பப்பட்டது. இதனால் தேவைக்கு தகுந்த மாதிரி ஐசிசி தொடர்களில் 15 வீரர்களில் ஒரு வீரரை இந்திய அணி நிர்வாகத்தால் சேர்த்துக் கொள்ள முடிந்தது.

தற்பொழுது இந்திய அணிக்கு டி20 கிரிக்கெட் வடிவத்தில் இரண்டு விக்கெட் கீப்பர்களுமே மிடில் வரிசையில் விளையாடக்கூடியவர்களாக தேவைப்படுகிறது. ஏனென்றால் ஜெயஸ்வால் ரோஹித் சர்மா கில் மற்றும் ருதுராஜ் என நான்கு பேர் துவக்க ஆட்டக்காரர்களாக இருக்கிறார்கள்.

இதில் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக அணியில் இடம் பிடிப்பது உறுதி. எனவே மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக ஒரு முழுமையான பேட்ஸ்மேன் மட்டுமே தேவைப்படுகிறார். இந்த இடத்திற்கு கில் இல்லை ருதுராஜ் தேர்வு செய்யப்படலாம். இந்த காரணத்தினால்தான் மேல் வரிசையில் விளையாடும் விக்கெட் கீப்பர் தேவைப்படவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக, கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு விக்கெட் கீப்பராகவும், மிடில் வரிசை பேட்ஸ்மேனாகவும் விளையாட விரும்புவதாக தெரிகிறது.

இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது ” ஆட்டோமேட்டிக் கார்கள் போன்றவர் கேஎல்.ராகுல். அவரால் முதல் ஐந்து கியரில் எப்படி வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய முடியும். மேலும் அவரிடம் ஆறாவது கியரும் இருக்கிறது. எனவே இந்தக் காரணத்தினால் கீழ் வரிசையில் அவர் விளையாடுவது மோசமான முடிவாக இருக்காது.

இதையும் படிங்க : “அடுத்த தோனி ரிங்கு சிங்.. ஆனா அடுத்த ரிங்கு சிங் இந்த பையன்தான்” – அஸ்வின் கருத்து

இது அவருடைய லக்னோ அணிக்கு நல்ல முடிவாக இருக்கலாம். துவக்க ஆட்டக்காரர்களாக கையில் மேயர் மற்றும் குயின்டன் டி காக் இருவரும் வரலாம். இப்படி அமைந்தால் ஒட்டுமொத்தமாக இந்திய பந்துவீச்சுக் குழுவை நம்பி லக்னோ அணி களமிறங்கும்” என்று கூறியிருக்கிறார்.