டி20 உ.கோ இந்திய அணியில் வைல்ட் கார்டில் தோனி.. அகர்கர் மறுக்க முடியாது – இந்திய முன்னாள் வீரர்கள் பேச்சு

0
352
Dhoni

இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்ததும், ஜூன் மாதம் ஒன்றாம் தேதி டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான அணி எப்படி அமையும் என பலரும் பலவிதமான யோசனைகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர்கள் சிலர் தோனி டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவது குறித்து பேசி இருக்கிறார்கள்.

தற்பொழுது இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக யாரை டி20 உலக கோப்பையில் தேர்ந்தெடுப்பது என்று பெரிய விவாதம் சென்று கொண்டிருக்கிறது. சஞ்சு சாம்சன் நடப்பு ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் இருந்து மிகச் சிறப்பாக இருந்து வருகிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என இரண்டு பக்கத்திலும் பழைய அளவுக்கு வந்து இருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது டி20 உலக கோப்பை இந்திய அணிக்கான விக்கெட் கீப்பர்கள் தேர்வில் இவர்கள் இருவரும் முன்னணியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து மூத்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் சிறப்பான செயல்பாட்டின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார். மேலும் லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுலும் கடந்த சில போட்டிகளாக அதிரடியாக விளையாடுவதோடு, விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தலான கேட்ச் எடுத்து வருகிறார்.

தற்போது இவர்கள் நான்கு பேரும்தான் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களுக்கான போட்டியில் இருக்கிறார்கள். இஷான் கிஷான், ஜிதேஷ் சர்மா மற்றும் துருவ் ஜுரல் ஆகிய இளம் விக்கெட் கீப்பர்கள் இந்த போட்டியில் இல்லை. மேலும் இவர்களின் பேட்டிங் செயல்பாடும் பெரிய அளவில் கவனம் ஈர்ப்பதாகவும் இல்லை.

இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் தோனி இருப்பது பற்றி பேசிய இந்திய முன்னாள் வீரர் வருண் ஆரோன் “டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் தோனியை வைல்ட் கார்டு என்ரியில் பார்க்க முடியும்” என்று கூறும்பொழுது, இவருடன் சேர்ந்து பேசிய இர்ஃபான் பதான் “தோனி டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று சொன்னால், யாரும் அவருக்கான வாய்ப்பை மறுக்க மாட்டார்கள். அதே சமயத்தில் அவர் விளையாட விட்டாலும் அது குறித்து யாரும் வருத்தப்படவும் மாட்டார்கள்” என்று கூறுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உ.கோ 2024.. ராயுடு செலக்ட் செய்த மாஸான இந்திய அணி.. சாம்சன் பண்ட்டுக்கு இடமில்லை

இது சம்பந்தமாக வீரேந்திர சேவாக் கூறும்பொழுது ” எம்.எஸ்.தோனியின் ஸ்டிரைக் ரேட் 250க்கு மேல் இருக்கிறது. அவர் 35 பந்துகளில் 91 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் அவர் இதுவரையில் ஆட்டமே இழக்கவில்லை. நாம் டி20 உலக கோப்பை அட்டவணையில் சிறந்த சில அணிகளுக்கு எதிராக விளையாடுவோம். அப்பொழுது விக்கெட் கீப்பர் இடத்திற்கு தோனியை விட சிறந்தவராக இருந்திட முடியும்?” என்று பேசி இருக்கிறார்.