டி20 உ.கோ 2024.. ராயுடு செலக்ட் செய்த மாஸான இந்திய அணி.. சாம்சன் பண்ட்டுக்கு இடமில்லை

0
284
Ambati

ஐபிஎல் தொடர் தற்போது பாதி நிலையை கடந்திருக்கும் நிலையில், இந்திய முன்னாள் வீரர்களின் பார்வை டி20 உலகக் கோப்பையை நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு தனது டி20 உலகக்கோப்பை இந்திய அணியை தேர்வு செய்திருக்கிறார்.

நடப்பு டி20 உலகக்கோப்பை இந்திய அணியை உருவாக்குவது என்பது இந்திய தேர்வுக் குழுவுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருந்து வருகிறது. ஒருபுறம் போட்டியாளர்களாக வரக்கூடிய சில அணிகள் மிகச் சிறந்த அணியை தயார் செய்யக்கூடிய இடத்தில் இருக்கின்றன. அவர்களுக்கு தேவைக்கு அதிகமான வீரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு ஏற்றவர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது 14 மாதம் கழித்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் இந்திய டி20 அணிக்குள் கொண்டு வந்த காரணத்தினாலும், விக்கெட் கீப்பர்கள் யார்? என்கின்ற குழப்பம் இருக்கின்ற காரணத்தினாலும், டி20 உலக கோப்பை இந்திய அணியை தேர்வு செய்வதில சில குழப்பங்கள் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் அம்பதி ராயுடு தேர்ந்தெடுத்துள்ள டி20 உலகக்கோப்பை அணியில் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரே ஒரு விக்கெட் கீப்பர் மட்டுமே இருக்கிறார். அந்த விக்கெட் கீப்பரும் தினேஷ் கார்த்திக். அம்பதி ராயுடு, சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் இருவரையும் தனது அணியில் சேர்க்கவில்லை.

மேலும் அம்பதி ராயுடு ஆச்சரியப்படுத்தும் விதமாக ரியான் பராக் மற்றும் மயங்க் யாதவ் இருவரையும் தேர்வு செய்து இருக்கிறார். இவர்களோடு இளம் வீரர்களான ரிங்கு சிவம் துபே ஆகியோரும் வருகிறார்கள். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஒதுக்கப்பட்ட சாகலுக்கும் இவரது அணியில் இடம் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் என்னை மாதிரி ஆகவே முடியாது.. அவருக்கும் அது தெரியும் – சேவாக் பேட்டி

அம்பதி ராயுடு தேர்வு செய்துள்ள 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணி :

ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரியான் பராக், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாகல், குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ், அர்ஸ்தீப் சிங் மற்றும் மயங்க் யாதவ்.