இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளர் என அறியப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உம்ரான் மாலிக் திடீரென இந்திய கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போய் இருக்கிறார். தற்போது அவர் குறித்த முக்கியமான தகவல்களை இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வலைப் பயிற்சியில் பந்துவீச்சாளராக இம்ரான் மாலிக் வந்தார். பின்பு நடராஜன் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட விளையாடும் வாய்ப்பை பெற்று உம்ரான் மாலிக் வேகத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து, இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார்.
சிறப்பு திறமையால் வாய்ப்பு பெற்ற அவரால் வேகமாக மட்டுமே வீச முடிந்தது. அவரிடம் சரியான கட்டுப்பாடு மற்றும் வேரியேஷன்கள் எதுவும் இல்லாததால் நிறைய ரன்கள் கொடுத்தார். கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பெரிய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.
அதே சமயத்தில் கடந்த ஆண்டு உள்நாட்டு சீசனில் இம்ரான் மாலிக் உடன் சேர்ந்து இர்பான் பதான் வேலை செய்திருந்தார். மேலும் மோசமான வானிலை காரணமாக கடந்த ஆண்டில் உள்நாட்டு சீசனில் ஜம்மு காஷ்மீரில் உம்ரான் மாலிக் 47 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி இருந்தார். ஆனால் இர்பான் பதான் உடன் இருந்ததால் அவர் சில விஷயங்களை கற்று முன்னேறி இருக்கிறார்.
இது குறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “இம்ரான் மாலிக் ஸ்விங் மற்றும் பந்து வீச்சு கட்டுப்பாட்டுக்காக தன்னுடைய வழக்கமான வேகத்தை குறைத்துக் கொள்வதை நான் விரும்பவில்லை. அவர் தொடர்ந்து வலை பயிற்சியில் புதிய பந்தில் பந்துவீசி பயிற்சி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.இதன் மூலமாக அவருக்கு நல்ல கண்ட்ரோல் கிடைக்கும். சரியான லென்த்தில் வீச முடியும்.
மேலும் பந்தை சரியான மணிக்கட்டு நிலையுடன் எப்படி ஸ்விங் செய்ய முடியும் என்று அவரால் புரிந்து கொள்ளவும் முடியும்.ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் தாண்டி இம்ரான் மாலிக் தற்பொழுது தன்னுடைய யார்க்கர் பந்துவீச்சில் வேலை செய்து வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : பாண்டிங் இந்தியாகிட்ட மைண்ட் கேம் ஆடாதிங்க.. இந்த 6 பேர் இருக்கறப்ப ஆஸி ஜெயிக்காது – பாக் பசித் அலி விமர்சனம்
இந்திய கிரிக்கெட்டில் முனாப் பட்டேல் ஆரம்ப காலத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் பந்து வீசும் இயற்கையான திறனை பெற்றிருந்தார். ஆனால் பின்பு பந்துவீச்சு கட்டுப்பாட்டுக்காக அவர் தன்னுடைய வேகத்தை குறைத்துக் கொண்டார். இதனால் அவர் ஒரு சராசரி வேகத்தில்தான் கடைசிவரையில் பந்து வீசினார். அப்படி உம்ரான் மாலிக் ஆகி விடக்கூடாது என இர்பான் பதான் விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






