இந்திய அணியின் ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணம் நவம்பர் மாதத்தில் இருக்கும் இந்த நிலையிலேயே அதை ஒட்டிய விவாதங்கள் ஆரம்பித்துவிட்டது. இந்திய அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி ரிக்கி பாண்டிங் பேச்சை விமர்சனம் செய்திருக்கிறார்.
ரிக்கி பாண்டிங் நேற்று அளித்திருந்த பேட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-1 எனக் கைப்பற்றும் என்று கூறியிருந்தார். இரண்டு முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியாவில் வீழ்த்தி இருக்கின்ற காரணத்தினால், இது ஆஸ்திரேலியா அணிக்கு வெல்வதற்கு புள்ளியாக அமைந்திருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி ஆஸ்திரேலியர்கள் ஒரு தொடருக்கு முன்பாக இப்படியான மைண்ட் கேமில் ஈடுபடுவது எப்பொழுதும் செய்யும் வேலைதான் என்றும், இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட ஐந்து வீரர்கள் இல்லையென்றால் மட்டுமே ஆஸ்திரேலியா அணியால் வெல்ல முடியும் என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து பசித் அலி கூறும் பொழுது ” இந்தியாவை ஆஸ்திரேலியா 3-1 என வீழ்த்தும் என்று ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார். இது ஒரு பெரிய ஸ்டேட்மென்ட். இப்பொழுதே மைண்ட் கேம்கள் ஆரம்பித்துவிட்டது. ஆனால் இது மைண்ட் கேம் என இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். கடைசியாக ஆஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணி இரண்டு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. அப்போதைய காலத்துக்கும் இப்போதைய காலத்துக்கும் பெரிய வித்தியாசமே கிடையாது.
எனக்கு ஆஸ்திரேலியர்களை பற்றி மிக நன்றாகவே தெரியும்.அவர்கள் இப்படியான அறிக்கைகளை விட்டு மைண்ட் கேமில் ஈடுபடுவது எப்பொழுதும் வாடிக்கையான ஒன்று. ஆஸ்திரேலியா அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளையும் இந்திய அணிக்கு எதிராக வெல்லலாம், ஆனால் இந்திய அணியில் சமி, சிராஜ், பும்ரா, ரோகித் விராட் மற்றும் ஜெய்ஸ்வால் என ஆறு வீரர்கள் இல்லாமல் இருந்தால் மட்டும்தான் அது முடியும்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: இந்திய டெஸ்ட் தொடர்.. ஸ்மித் பற்றி ஒரு டவுட் இருக்கு.. ஆனா அது அந்த வீரர் சம்பந்தப்பட்டது – ரிக்கி பாண்டிங் பேச்சு
தற்பொழுது இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் ஆஸ்திரேலியாவில் மோதிக் கொள்ளும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு இருநாட்டு ரசிகர்களிடம் மட்டுமே இல்லாமல் பொதுவான உலக கிரிக்கெட் ரசிகர்களிடம் பரவலான எதிர்பார்ப்புக்கு காணப்படுகிறது. இந்திய அணியுமே இந்த தொடருக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து நீண்ட ஓய்வில் தற்பொழுது வீரர்களை வைத்து வருகிறது!