கோலி பாபரை தாண்டி.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து வீரர் யாரும் செய்யாத உலக சாதனை

0
144
Stirillg

தற்பொழுது ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் யுனைடெட் அரபு எமிரேட்டில் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகின்றன. இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை அயர்லாந்து கைப்பற்றியது.

தற்பொழுது ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு ஹாரி டெக்டர் 34 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அந்த அணியில் இருக்கக்கூடிய நட்சத்திர வீரர்கள் சிலர் ஏமாற்றம் தந்தார்கள். முகமது இஷாக் 32, முகமது நபி 25 ரன்கள் எடுத்தார்கள். ஆப்கானிஸ்தான அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்து, 38 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்தது.

தற்போது பொதுவான ஒரு இடத்தில் வைத்து இரண்டு அணிகளும் விளையாடி வருகின்ற நிலையில், சமீப காலத்தில் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி, வெளியில் இருந்து வரக்கூடிய அயர்லாந்து அணிக்கு எதிராக தொடர்ச்சியாக தோல்விகளை சந்திப்பதுசற்று ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று அயர்லாந்து அணிக்கு விளையாடிய பெரிய அனுபவம் மிக்க துவக்க ஆட்டக்காரர் வலது கை பேட்ஸ்மேன் பால் ஸ்டிரில்லிங் 27 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 25 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.

- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அவர் இந்த போட்டிக்கு முன்பாக 398 பவுண்டரிகள் அடித்திருந்தார். நேற்று அவர் அடித்த இரண்டு பவுண்டரிகள் மூலமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்கின்ற அரிய சாதனையைப் படைத்து அசத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024: ஸ்டீவ் ஸ்மித் முதல் ஆர்ஜே பாலாஜி வரை.. வெளியான கிரிக்கெட் வர்ணனையாளர்கள் லிஸ்ட்

சர்வதேச டி20 கிரிக்கெட் பல சாதனைகளை கைவசம் வைத்திருக்க கூடியவராக விராட் கோலி இருக்கிறார். அவரைத் தொடர்ந்து மிக வேகமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரக்கூடியவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் இருக்கிறார். இந்த நிலையில் இவர்களைத் தாண்டி அயர்லாந்து மாதிரி ஒரு சிறிய நாட்டில் இருந்து ஒருவர் வந்து இந்த சாதனையை செய்திருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் லிஸ்ட் :

பால் ஸ்டிர்லிங் அயர்லாந்து 400
பாபர் அசாம் பாகிஸ்தான் 395
விராட் கோலி இந்தியா 361
ரோகித் சர்மா இந்தியா 359