“ஐபிஎல் அணிகள் ஸ்டார்க் செய்த துரோகத்தை மறக்காது.. அவரை வாங்காது” – இந்திய முன்னாள் வீரர் அதிரடி பேச்சு!

0
459
Starc

ஆஸ்திரேலியா அணியின் பவுலிங் சூப்பர் ஸ்டார் மிட்சல் ஸ்டார்க், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பதாக அறிவித்திருக்கிறார்!

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்குப் பயிற்சி பெறும் விதமாக அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

- Advertisement -

மிட்சல் ஸ்டார்க் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2018 ஆம் ஆண்டு பெயர் கொடுத்து அவரை கொல்கத்தா அணி நிர்வாகம் வாங்கி, பின்பு அவர் விளையாட விருப்பம் இல்லை என்று விலகிவிட்டார்.

அவர் இதுவரையில் ஐபிஎல் தொடரில் இரண்டு சீசன்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியிருக்கிறார். இந்த இரண்டு சீசன்களில் அவருடைய செயல்பாடு மிகவும் நன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் அவர் நாட்டிற்காக விளையாடுவதே முக்கியம், ஐபிஎல் முக்கியமில்லை என்று கூறி ஐபிஎல் தொடரை புறக்கணித்தார். தற்பொழுது திரும்ப வருவதாகக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “அவரை யாராவது வாங்குவார்களா? 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் விளையாடவே இல்லை. அவர் ஐபிஎல் தொடர் ஏலத்தில் பெயரைக் கொடுப்பதும், பின்பு அதிலிருந்து பின்வாங்குவதுமே அவரது பிரச்சனை. நீங்கள் பெயரைக் கொடுத்து உங்கள் மேல் முதலீடு செய்து, பின்பு நீங்கள் அதிலிருந்து விலகுவது துரோகம். ஐபிஎல் அணிகள் துரோகத்தை அவ்வளவு எளிதில் மறக்காது.

- Advertisement -

எனவே இது மிகவும் சுவாரசியமாக இருக்கும். இதுபோலவே வெளிநாட்டு வீரர்கள் தாங்கள் பெரிய விலைக்கு ஐபிஎல் ஏலத்தில் போகவில்லை என்றால், தனிப்பட்ட காரணங்கள் என்று கூறி, அணிகள் இவர்களை வாங்கிய பிறகு விலகிக் கொள்கிறார்கள். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் இப்படி விலகியதை நாம் பார்த்தோம். ஐபிஎல் அணிகள் இதை மறப்பதில்லை. அவர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

அதே சமயத்தில் மிட்சல் ஸ்டார்க் தன் திறமையின் மூலம் என்ன கொண்டு வருகிறார்? என்று பார்த்தால், அவர் முற்றிலும் தனித்துவமானவர். அவர் ஐபிஎல் தொடரில் விளையாடிய போதெல்லாம் புதிய மற்றும் பழைய பந்தில் விக்கெட் எடுக்கக் கூடியவராக இருந்தார்.

நிஜமாகவே அவர் தடுக்க முடியாத ஒருவர். எனக்கு ஞாபகம் இருப்பது என்னவென்றால் அவர் ஒரு ஓவருக்கு ஏழு ரன்கள் கூட கொடுக்கவில்லை. அவர் ஸ்டெம்பை தாக்கினார். T20 போட்டிகளில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகாது. ஆனால் அவர் அதையும் செய்தார். எனவே அவர் ஒரு அற்புதமான வீரர்!” என்று கூறி இருக்கிறார்!