ஐபிஎல் ; பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் காயத்தால் தொடரில் இருந்து வெளியேறுகிறார்

0
1250
Punjap

15 ஆண்டுகளாக நடைபெற்று வந்து தற்பொழுது 16 வது ஆண்டாக நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் மிக மோசமான செயல்பாட்டைக் கொண்டிருக்கக்கூடிய அணியாக இருப்பது பஞ்சாப் கிங்ஸ் அணிதான்!

பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை நடைபெற்ற 15 ஐபிஎல் சீசங்களில் இதுவரை இரண்டு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றை எட்டி இருக்கிறது என்பது மிகவும் ஒரு மோசமான வரலாறு!

- Advertisement -

கடந்த ஆண்டு மெகா ஏலத்தின் போது அணியில் ஏற்கனவே இருந்த மயங்க் அகர்வாலை 14 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தக்க வைத்தது. அவரையே கடந்த ஆண்டு கேப்டனாகவும் அறிவித்து தொடரை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

இந்த நிலையில் இந்த ஆண்டு மினி ஏலத்தின் போது 14 கோடிக்கு தக்கவைக்கப்பட்டு கேப்டனாக அறிவிக்கப்பட்ட மயங்க் அகர்வாலை ரிலீஸ் செய்தது பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம். தன்னுடைய மெகா அணி தேர்வு சொதப்பலை இந்த ஆண்டு வரை பஞ்சாப் அணி நிறுத்திக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரர் இடது கை துவக்க ஆட்டக்காரர் சிகர் தவானை தற்பொழுது கேப்டனாக அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும் தேர்வாகி வந்த ஷிகர் தவான் தற்பொழுது ஒருநாள் அணியில் இருந்தும் நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் கொடுக்கப்படாத விலையை கொடுத்து சாம் கரனை வாங்கியது. மேலும் ஜிம்பாப்வே நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராஸாவையும் வாங்கியது.

இந்த முறை எப்படியும் மீண்டு எழுந்து வந்து விடும் என்று எதிர்பார்த்து இருந்த வேளையில் தற்பொழுது ஒரு மிகப்பெரிய பின்னடைவாக, கடந்த மெகா ஏலத்தின் போது 6.75 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பிங் அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக இந்த ஆண்டு வெளியேறி இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி ஆரம்பித்து மே 28ஆம் தேதி முடிவடைகிறது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஸஸ் டெஸ்ட் தொடர் ஜூன் 18ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. தற்பொழுது ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து ஜானி பேரஸ்டோ ஆசஸ் தொடருக்குத்தான் திரும்பி வருவார் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் அதல பாதாளத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கு இது மோசமான ஒரு பின்னடைவாக அமைந்திருக்கிறது!