வீடியோ: இருபதாயிரம் ரூபாய்க்கு ஐபிஎல் ப்ரீமியம் டிக்கெட், அப்படி என்ன ஸ்பெஷல் இந்த டிக்கெட்டில்?

0
195

உலக டி20 கிரிக்கெட் போட்டிகள் இன் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் என அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் 16 வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்தத் தொடரின் முதல் ஆறு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .

2023 ஆம் ஆண்டின் சீசன் நடப்பு சாம்பியன் குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் கடந்த 31ஆம் தேதி குஜராத் மாநில அகமதாபாத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆன நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்றது .

- Advertisement -

இந்தப் போட்டியில் குஜராத் அணி சென்னையை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது . இந்தப் போட்டியின் போது நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் விலை உயர்ந்த டிக்கெட் மற்றும் அதன் சலுகைகளை பற்றிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் ஒருவர் பதிவேற்றி இருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழா மற்றும் முதல் ஒருநாள் போட்டிக்கான ப்ரீமியம் டிக்கெட்டை 20000 ரூபாய்க்கு வாங்கி இருக்கும் அந்த நபர் அந்த டிக்கெட்டில் என்னென்ன சலுகைகள் இருக்கின்றன என்பதை பற்றியும் தனது வீடியோ மூலமாக சமூக வலைதளணவர்களுக்கு பகிர்ந்திருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் ப்ரீமியம் சூட் என்று அழைக்கப்படும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையான வசதிகளுடன் கிரிக்கெட்டை ரசிக்கும் வகையில் மைதானத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஸ்டார் ஹோட்டலில் விஐபி சூட் கிடைக்கின்ற அனைத்து சலுகைகளும் இந்த பிரிமியம் சூட் பயனாளர்களுக்கு மைதானங்கள் வழங்குகிறது .

- Advertisement -

இந்த பிரீமியம் ஷூட் டிக்கெட் எடுத்தால் மைதானத்திற்குள் நடந்து போக வேண்டிய அவசியம் இல்லை நம்ம எலக்ட்ரிக் கார்கள் இல் அவர்களே அழைத்துச் செல்கிறார்கள். மேலும் இதற்கான இருக்கை அமைப்பு மைதானத்தின் மிகச் சிறந்த இடத்தில் அமைந்துள்ளது. இதனை நாம் அவரது காணொளியின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதனுடன் இணைந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரெஸ்டாரன்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல சலுகைகளை உடைய பிரிமியம் சூட் கிரிக்கெட்டின் விலை குஜராத் அகமதாபாத்தில் 20000 ரூபாய் ஆகும்.

ஐபிஎல் 2023க்கான மிக விலையுயர்ந்த டிக்கெட்டுகள்:

சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு ( பெங்களூர் ): 50,000 ரூபாய் ($600)

வான்கடே ஸ்டேடியம், மும்பை: 30,000 ரூபாய் ($360)

ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா: 26,000 ரூபாய் ($310)

அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி: 22,000 ரூபாய் ($260)

நரேந்திர மோடி ஸ்டேடியம் அகமதாபாத் 20.,000 ரூபாய்  ($240)