மேலே ஏறி வந்த மும்பை அணி.. சவாலாக மாறிய ஐபிஎல் புள்ளி பட்டியல்.. இத்தனை அணிகளுக்கும் ஒரே புள்ளியா?

0
2083

ஐபிஎல் தொடரில் 16 ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான அணிகள் ஒன்பது போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். லக்னோ,சென்னை, மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மட்டும் பத்து போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள்.

ஐதராபாத் அணி மட்டும் 8 போட்டி விளையாடி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்கள்,  காரணமாக ஐபிஎல் புள்ளி பட்டியலில் ஒரு ரத்தக் கலறியே நடைபெற்று இருக்கிறது. லக்னோ, சிஎஸ்கே அணிகள் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இதனால் லக்னோ 11 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் சிஎஸ்கே அணி 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதைப் போன்று பஞ்சாப் அணியை மும்பை வீழ்த்தியதால் தற்போது அவர்கள் ஒன்பது போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி நான்கு தோல்வி அடைந்து 10 புள்ளிகள் உடன் ஆறாம் இடத்தில் இருக்கிறார்கள்.

தற்போது உள்ள நிலவரப்படி குஜராத் அணி 12 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறது. லக்னோ மற்றும் சிஎஸ்கே அணிகள் 11 புள்ளிகள் உடன் அடுத்தடுத்து உள்ளன.  ராஜஸ்தான், மும்பை பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் 10 புள்ளிகளுடன் முறையே 4 ,5 ,6 மற்றும் 7வது இடத்தில் இருக்கிறது. கடைசி மூன்று இடங்களில் கொல்கத்தா ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் தலா 6 புள்ளிகளுடன் இருக்கிறது.

இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளுக்குமே பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறது. இதில் டெல்லி, கொல்கத்தா அணிகள் அனைத்து போட்டிகளிலும் வென்றாலும் மற்ற அணிகளின் தயவு தேவைப்படுகிறது. பிளே ஆப் சுற்றுக்கு சொல்ல வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 16 அல்லது 18 புள்ளிகளாவது தேவைப்படும்.

- Advertisement -

அப்படி இருக்க குஜராத் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு எளிதாக கிடைத்து விடும்.அப்பொழுது மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தங்களுக்கு எஞ்சி இருக்கின்ற நான் ஆட்டங்களும் குறைந்த பட்சம் மூன்று போட்டியில் வெல்ல வேண்டும். அப்படி என்றால் அவர்களால் 17 புள்ளிகள் பெற முடியும். இதைப் போன்று மும்பை அணி தற்போது 10 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. அவர்களுக்கு இன்னும் ஐந்து போட்டிகள் எஞ்சி இருக்கிறது.

இதில் அவர்கள் குறைந்த பட்சம் 4 போட்டிகள் என்றால் கூட 18 புள்ளிகளை பெற்று சென்றுவிடலாம். இதே நிலையில் தான் பெங்களூருக்கும் ராஜஸ்தான் அணிகளும் உள்ளன.இதனால் டாப் ஏழு இடத்தில் உள்ள அணிகள் தங்களுக்கும் கடுமையாக மோதிக் கொள்வார்கள். சென்னை அணி தங்களது சொந்த மண்ணில் மூன்று போட்டிகளில் விளையாடுகிறது சாதகமான சூழலாக பார்க்கப்படுகிறது.