குஜராத் டைட்டன்ஸ் சாதனை வீரர் ராபின் மின்ஸ் சாலை விபத்து.. தந்தை தெரிவித்த உண்மை நிலவரம்

0
172
Robin

இந்த மாதம் மார்ச் 22ஆம் தேதி 17 வது ஐபிஎல் சீசன் துவங்க இருக்கிறது. நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் சீசனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் துபாயில் வைத்து மினி ஏலம் நடத்தப்பட்டது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இந்திய விக்கெட் கீப்பராக விருதிமான் சகா மற்றும் வெளிநாட்டு விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலிய வேட் ஆகியோர் இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, இளம் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரைத் தேடிப்பிடிக்க குஜராத் டைட்டன்ஸ் ஏலத்தில் சென்றது.

டெல்லி அணி ஏழு கோடிக்கு மேல் கொடுத்து ஜார்க்கண்ட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் குமார் குஸ்கராவை வாங்கியது. ஒருவேளை ரிசப் பண்ட் விளையாடாமல் போனால், மாற்று இந்திய விக்கெட் கீப்பராக அவரைப் பார்த்தது.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இன்னொரு இளம் விக்கெட் கீப்பிங் இடது கை பேட்ஸ்மேனான ராபின் மின்சை 3.60 கோடி ரூபாய் கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது. இவரை எல்லோரும் இடதுகை பொல்லார்ட் என்று அழைக்கிறார்கள்.

- Advertisement -

அந்த அளவிற்கு அதிரடியாக ஆடக்கூடிய துவக்க ஆட்டக்காரராக இருக்கிறார். எனவே வருகின்ற ஐபிஎல் தொடரில் இவர் மீது எதிர்பார்ப்புகள் நிறைய நிலவியது. மேலும் இவர் ஐபிஎல் தொடரில் முதல் பழங்குடியின வீரர் என்கின்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய கவாஸ்கி சூப்பர் பைக்கில் சென்ற பொழுது, கட்டுப்பாட்டை இழந்து இன்னொரு பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் இவருக்கு ஏற்பட்டுள்ள காயம் சிறிய அளவில் இருப்பதாகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நியூஸ் 18 சேனல் கூறி இருக்கிறது.

இதையும் படிங்க : வார்னே முரளிதரனையே அலற விட்டோம்.. இந்த சின்ன பசங்கள சமாளிக்க முடியல.. என்ன காரணம்? – ஆகாஷ் சோப்ரா பேச்சு

இந்த சேனலுக்கு அவருடைய தந்தை பிரின்ஸ் கூறும் பொழுது “அவரது பைக் மற்றொரு பைக் உடன் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. அவருக்கு இதனால் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தற்போது அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்” என்று கூறி விபத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.