ஐபிஎல் மினி ஏலம்.. இனி அதிக சம்பளம் கிடையாது.. ஆஸி இங்கிலாந்து திட்டம் பலிக்காது – ஐபிஎல் சேர்மன் புதிய அறிவிப்பு

0
447
Arun

இன்று உலகின் மிகப்பெரிய பணக்கார டி20 லீக் ஆக இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது. இதன் காரணமாக உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு மிகப்பெரிய ஆர்வத்தை காட்டி வருகிறார்கள். ஒரு சீசனில் கிடைக்கும் பணம் ஒரு கிரிக்கெட் வீரரின் மொத்த வாழ்க்கையையும் மாற்றி அமைக்க கூடியதாக இருக்கிறது.

அதே சமயத்தில் ஐபிஎல் தொடரில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலமும், நடுவில் இருக்கும் இரண்டு ஆண்டுகளில் மினி ஏலமும் நடத்தப்படுகிறது. மினி ஏலம் என்பது ஐபிஎல் தொடரின் போட்டித் தன்மையை இன்னும் அதிகமாகக் கூடியதாக இருக்கிறது. காரணம் மெகா ஏலத்தில் அணிகள் வீரர்களை வாங்குவதில் ஏதாவது தவறு செய்திருந்தால், அவர்கள் மினி ஏலத்தின் மூலம் மீண்டும் சரியான அணியை உருவாக்க முடியும். இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் போட்டித் தன்மை அதிகரிக்கும்.

- Advertisement -

ஐபிஎல் அணிகள் வீரர்களை தேர்வு செய்யச் செய்வதில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்ய ஐபிஎல் ஏலத்திற்கு செல்கின்ற காரணத்தினால், அங்கு அணிகளின் தேவைக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கிறது. வீரர்களின் திறமைக்கு ஏற்ற சம்பளம் என்பது இரண்டாவது பட்சமாக மாறுகிறது. எனவே தங்களுக்கு தேவைப்படும் வீரர்களுக்கு தங்களிடம் இருக்கும் பணத்தில் பெரிய பகுதியை கொடுக்க ஐபிஎல் அணிகள் மினி ஏலத்தில் தயாராக இருக்கும்.

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் 20.50 கோடிக்கு ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இவர்தான் ஐபிஎல் வரலாற்றில் முதல் 20 கோடியை தாண்டிய வீரர். இதே ஏலத்தில் அடுத்த சிறிது நேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆஸ்திரேலியாவை சேர்ந்த இடது கை வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை 24.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகபட்சதொகை கொடுத்து வீரர் வாங்கப்பட்ட நிகழ்வு இதுதான்.

இனி நாசூக்காக ஏமாத்த முடியாது

ஐபிஎல் மினி ஏலத்தில் தங்கள் தேவைக்காக ஐபிஎல் அணிகள் பணத்தைக் கொட்டிக் கொடுக்க இருக்கின்ற காரணத்தினால் சில பிரச்சனைகள் உருவானது. அதாவது மெகா ஏலத்தில் கலந்து கொண்டால் குறைந்த ஊதியம் கிடைக்கும், அதுவே ஒரு வருடம் கழித்து மினி ஏலத்தில் கலந்து கொண்டால் இரண்டு ஆண்டுகளுக்கு பெரிய தொகை கிடைக்கும். மேலும் ஒரு வருடம் விளையாட வேண்டிய அவசியமும் கிடையாது. மெகா ஏலத்தில் மூன்று வருடத்தில் சம்பாதிப்பதை விட, மினி ஏலத்தின் மூலம் வந்து விளையாடினால் இரண்டு வருடங்களில் பெரிதாக சம்பாதிக்கலாம் என்கின்ற குறுக்கு வழியை இங்கிலாந்து ஆஸ்திரேலியா வீரர்கள் பயன்படுத்திக் கொள்வதாக இந்திய கிரிக்கெட் மட்டத்தில் புகார்கள் இருந்தன.

- Advertisement -

தற்பொழுது இதற்கு பதில் அளித்து பேசி இருக்கும் ஐபிஎல் சேர்மன் அருண் துமால் கூறும் பொழுது ” ஐபிஎல் மினி ஏலம் உருவாக்கும் சம்பள வேறுபாட்டை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம். நாங்கள் இதுகுறித்து பேசி ஆராய்ந்து புதிய கொள்கையை வெளியிடுவோம். எங்களுக்கு இது சம்பந்தமாக சில யோசனைகள் வந்திருக்கின்றன. ஆனால் அதை நாங்கள் செயல்படுத்துவதற்கு முன்பாக அணி உரிமையாளர்களிடம் பேசுவோம்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024: இந்த புது ரூல் பவுலர்களுக்கு கொண்டாட்டம்தான்.. பேட்ஸ்மேன்கள் பாவம் – டேல் ஸ்டெய்ன் பேட்டி

இதேபோல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நிச்சயம் மெகா ஏலம் நடத்தப்படும். பிசிசிஐ இதை மாற்றிக்கொள்ள நினைக்கவில்லை. மேலும் ஒரு அணிக்கு நான்கு வீரர்கள் மட்டுமே தக்க வைக்க அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு மேல் எண்ணிக்கையை அதிகரித்தால் ஒரே மாதிரியான அணி உருவாகும். இதனால் மெகா ஏலம் நடத்தப்படுவதற்கு அர்த்தம் இல்லாமல் போகும். மேலும் புதிய அணிகள் வந்திருக்கின்றன. நிறைய வீரர்களை பழைய அணிகள் தக்க வைத்துக் கொண்டால், அவர்களால் தங்கள் அணியை உருவாக்க முடியாது” எனக் கூறியிருக்கிறார்.