2022 ஆம் ஆண்டு ஐபிஎல் 17வது சீசன் தொடங்குவதற்கு இன்னும் நடுவில் ஒருநாள் இருக்கிறது. நாளை தெரிய கோலாகல துவக்க விழாவுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி என் மூலம் ஐபிஎல் தொடங்குகிறது.
நடைபெற இருக்கும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக புதிய விதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த விதியின் படி ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர் பந்துகளை பந்து வீச்சாளர்கள் வீசலாம். ஆனால் உலகம் முழுக்க நடக்கும் டி20 லீக்குகளில் ஒரு பவுன்சருக்கு மட்டுமே ஒரு ஓவரில் அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக டி20 கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கான விளையாட்டு என்கின்ற கருத்து இருக்கிறது. இதன் காரணமாக போட்டியில் பந்துவீச்சாளர்கள் இருப்பதில்லை. இரண்டு அணிகளின் பேட்ஸ்மேன்கள் மட்டுமே மோதிக் கொள்ளும் போட்டியாக டி20 கிரிக்கெட் மாறி வந்தது. இதைக் கட்டுப்படுத்தவே பிசிசிஐ பந்துவீச்சாளர்களுக்காக நிறைய விதிகளை கொண்டு வருகிறது.
தற்பொழுது கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த புதிய விதியின் காரணமாக ஒரு பவுன்சர் பந்தை ஓவரின் ஆரம்பத்தில் பந்துவீச்சாளர் வீசிவிட்டால், அடுத்த பவுன்சர் வராது என்று பேட்ஸ்மேன்கள் மிகத் தைரியமாக விளையாடுவார்கள். ஆனால் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களால் அப்படி முன்னேறி சென்று விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பவுலர்களுக்கு கொண்டாட்டம்
இதுகுறித்து டேல் ஸ்டெய்ன் கூறும்பொழுது “ஆரம்பத்தில் ஒரு பவுன்சர் பந்து வீசினால் அடுத்து ஒரு யார்க்கர் வீச வேண்டிய நிலைமை இருக்கும். ஏனென்றால் இரண்டாவது பவுன்சர் கிடையாது. எனவே பேட்ஸ்மேன்கள் அடுத்த பந்து லென்த்தில் வராது என்று மிகச் சரியாக கனித்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது அப்படி எந்த நிலைமையும் கிடையாது. எல்லாமே மாறப்போகிறது.
நிறைய பேட்ஸ்மேன்கள் யார்க்கர் பந்துக்கு பயப்படுவார்கள். ஆனால் நீங்கள் இந்த வகையான பந்துகளை தோனி, சூர்யா மற்றும் பட்லர் போன்றவர்களுக்கு வெற்றிகரமாக வீசி விட முடியாது.அவர்கள் இதை அடிப்பதற்கு சில இடங்கள் இருக்கிறது. ஆனால் பவுன்சர் எனும் பொழுது பீல்டிங் செட்டப் செய்வது மிகவும் எளிது. பேட்ஸ்மேன் பின்புறமாக இரண்டு பீல்டர்களை வைப்பதன் மூலமே கட்டுப்படுத்த முடியும். எந்த பேட்ஸ்மேன் பெரிதாக பவுன்சர் பந்தை நேராக அடிப்பது கிடையாது.
இதையும் படிங்க : நான் இந்தியாவுல அவர மாதிரி யாரையும் பாக்கல.. நம்ம எதிர்காலம் செம்மையா இருக்கு – ரோகித் சர்மா கருத்து
எனவே இந்த விதி பந்துவீச்சாளர்களுக்கு நன்மையாக முடியும். அவர்கள் ஒரு ஓவரில் எப்பொழுது பவுன்சர் பந்தை வீச வேண்டுமென்று அதிகம் யோசிக்க தேவையில்லை. ஒரு பவுன்சர் முடிந்தாலும் இரண்டாவது பவுன்சரும் இருக்கிறது என்பது பேட்ஸ்மேனை சந்தேகத்தில் வைத்திருக்கும்” எனக் கூறி இருக்கிறார்.